Jump to content

Tamil Star News
Photo

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி

  • Please log in to reply
5 replies to this topic

#1 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,998 posts
  • Gender:Male

Posted 01 September 2012 - 03:38 AM

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2012 - 17:18 ஜிஎம்டி

Posted Image

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.

வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
"இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு "அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் " என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இது தனித்து போட்டியிடுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கும் அக்கட்சிக்குமிடையிலான உறவிலும் ஒரு வித சுமூகமற்ற சூழ்நிலை தேர்தல் பிரச்சாரங்களில் காணக் கூடியதாக உள்ளது. மாகாண சைபத் தேர்தலில் வெற்றி பெறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக போய்விடலாம் என்ற அச்சமும் சந்தேகமும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியல் காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே இந்த தீர்மானத்தை அக்கட்சி எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அதேசமயம், இத்தகைய உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை என்றும், இந்த நடைமுறையை தங்கள் கட்சி இதற்கு முன்னரும் கடைபிடித்திருக்கிறது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி. அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk...athtaking.shtml

"தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம். கருகிட திருவுளமோ"

பி.கு:முஸ்லீம் சமூகத்துடன் சமாதான விசுவாசமென்ற பெயரால் கூட்டமைப்பையும் புலிகளையும் வைதோரை யாழ் தினமும் பார்த்தது. இப்போது முஸ்லீம் சமூகத்தின் துரோகிகள் அவர்களையே காட்டிக்கொடுக்கும் செய்திகள்தான் தினமும் கிழக்கு மாகாணத்தேர்தலில் இருந்து வெளிவருகிறது. முஸ்லீம் சமூகத்தின் தூரோகிகளை இதுவரையும் தமிழருக்கு எதிராக பாவிக்கப்பட்டபின் அரசால் இப்போது அவர்களின் சமூகத்திற்கெதிராக பயன் படுத்தப்படும் போது முஸ்லீம் சமூகம் கடுமையாக அவதிப்படுகிறது. சமூகம் இதுவரைக்கும் காத்திராமல் தமிழரை காட்டிக்கொடுக்கும் போதே துரோகிகளை துரோககள் என்று கூறி முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம்.

Edited by மல்லையூரான், 01 September 2012 - 03:41 AM.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 01 September 2012 - 06:34 AM

"இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு "அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் " என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.

ஹக்கீமுக்கே நன்றாக தெரியும் என்ன நடக்கும் என்று.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#3 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 01 September 2012 - 06:46 AM

... நம்மை விடவா, அவர்கள் கேவலம்??????? .... கேபி, கருணா, பிள்ளையான், வரதராசர், ஆனந்தசங்கரி, ..... ....... இன்று சுமத்திரன் வரையில்!
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 01 September 2012 - 01:13 PM

ஆனால் நாம் பொதுவாக ஒற்றுமைக்கு அவர்களை குறிப்பிட்டு முன்னுதாரணமாக காட்டுவது வழக்கம். ஒருவேளை எங்கள் வியாதி அவர்களையும் தொற்றிவிட்டதோ தெரியவில்லை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#5 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,998 posts
  • Gender:Male

Posted 01 September 2012 - 03:06 PM

ஆனால் நாம் பொதுவாக ஒற்றுமைக்கு அவர்களை குறிப்பிட்டு முன்னுதாரணமாக காட்டுவது வழக்கம். ஒருவேளை எங்கள் வியாதி அவர்களையும் தொற்றிவிட்டதோ தெரியவில்லை.

அது அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் சகோதரத்துவத்தோடு தமக்குள் எல்லோருக்கும் சோறு போடுபவர்கள். அதனால் தான் துரோகிகளுக்கும் சோறு போட்டு காத்தவர்கள். நாங்கள் நான் அறிஞ்ச காலங்களாகிய குமாரசூரியர், கனகசூரியர் காலங்களில் இருந்து அப்படியானவர்களை ஒதுக்கத்தான் முயன்றுள்ளோம்.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

#6 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 01 September 2012 - 09:13 PM

தேர்தல் என்று வரும் பொழுது பிரிவினை காட்டுவார்கள். அது முடிந்ததும் அவர்கள் எல்லோரும் ஒற்றுமை.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை போட்டுத் தள்ளியது குறைவு. இல்லை என்றே சொல்லலாம். (ஈழ விடுதலைப் போராட்டம் இங்கு ஞாபகம் வருவதைத் தவிர்க்கவும்)
தங்களது சமூகத்தில் தாழ்ந்தவர்களை முன்னேற்றி விடுவார்கள். (உண்ண வழியில்லாத பெண் போராளிகளை மற்றயவர்கள் பாலியல் தொழிலுக்குப் பாவித்தாலும் நாங்கள் பாராதிருப்போம்)

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]