Jump to content


Tamil Star News
Photo

அன்பு மகனுக்கு


  • Please log in to reply
9 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 30 August 2012 - 11:54 AM

அன்பு மகனுக்கு,

உன் தந்தை எழுதுவது,
இது நீண்ட கடிதம்தான்
ஆனால்,

இதுவே இறுதியாகலாம்.

ஏனெனில்
உன் நினைவுகள் நெஞ்சடைக்க‌
இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.


உனக்கு நேரமில்லை
எனக்குத் தெரியும்.
முடியும்போது முடிந்தால் படி.

இந்த‌ நிலவினைப் பார்க்கும் போதெல்லாம்
உன் ஞாபகம்தான்.


மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும்,
கயிற்றுக் கட்டிலும்,
நான் சொன்ன‌
நட்சத்திரக் கதைகளும்,
உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...


ஆனால்

உன் நினைவுகளோடு மட்டும்தான்
என் நிமிடங்கள் ந‌கர்கிறது.

இதோ பரண் மீதிருந்த‌
உன் விளையாட்டு பொம்மையெல்லாம்
தரைமீது ஆடிக்கொண்டு,

அவை மட்டுமே இன்று என் ஆறுதல்களாய்...

அமரக்கூட முடியாதவளாய்
உன் அம்மா படுக்கையில்.
உனக்காகவே
ஓடி ஆடியவள் அல்லவா!


ஆனால்,
இன்றும் நீ வந்தால்
அவள் இருபது வயது குறைந்து
எழுந்து ஓடி வருவாள்
எனக்குத் தெரியும்.


தரைமீது ந‌டக்கவே
எங்கும் என் விரல் தேடியவன்


அன்று,
விண்மீது பறந்தபோது
வியப்பாகத்தான் இருந்தது.


தனிமையில் எம் வாழ்க்கை மட்டுமல்ல‌
வலிகளும் நியாயமானது.


அயல் நாட்டில்
உன் வாழ்க்கையைப் பார்க்கும்போது.

ஒற்றை நிலத்தில்
உயிர் இளைத்து,
உடல் கருத்த‌
ஏழை விவசாயி நான்.


உன் குரல் கேட்டு கண்ணீர் சிந்த‌
தொலைபேசி வசதியில்லை.


50 பைசாவிற்கு
நான் எழுதி அனுப்பும்
என் கடிதம்
உனைச் சேர முடிவதில்லை.


இக்கடிதம்கூட
நெடுநாளைய சேமிப்பு.

ஈன்ற‌ பொழுதில் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன்
எனக்கேட்ட தாய்.
சான்றோன் எனப் பலர் கூறக் கேட்டோம்.


ஆனால்,
அச்சான்றோனின் குரல் கேட்கத் தவிக்கின்றோம்.


http://tamilnanbargal.com/node/39862

Edited by akootha, 30 August 2012 - 11:55 AM.

  • BLUE BIRD, தமிழ் சிறி, சுபேஸ் and 7 others like this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 30 August 2012 - 12:02 PM

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 30 August 2012 - 12:16 PM

மிகவும் ஆழமான நெஞ்சை தொடும் வரிகள்.
பாசம் இருந்தும், பார்க்க வேண்டும் போல் இருந்தும் போக முடியாமல் தவிக்கும், என்னை போன்ற புலம்பெயர் மகன்களுக்கும் வலிக்கும் வரிகள்.

நன்றி அகோதா உங்கள் பதிவிற்கு.

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#4 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,414 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 30 August 2012 - 12:36 PM

அகூதா ..........தங்கள் பகிர்வுக்கு நன்றி .

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#5 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,333 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 30 August 2012 - 01:44 PM

தங்கள் பகிர்வுக்கு நன்றி

#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 30 August 2012 - 03:01 PM

பாரீசில் வாழும் சூட்டி ...

பத்து வரியேனும் எழுதடா தம்பி
உயிரோடு இருப்பேன் உன் பாட்டி...

என்ற புகழ்பூத்த தமிழீழ பாட்டியின் பாடலையும் நினைவூட்டியது இந்தக்கவிதை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,229 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 30 August 2012 - 04:18 PM

புலம்பெயர் வாழ்க்கைக்கும்,தாயகவாழ்க்கைக்கும் இடையில் உள்ள ஏக்க உணர்வு வேதனைக்குரியது ஒன்று...........நன்றி அகூதா இணைப்பிற்கு
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#8 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,558 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 August 2012 - 05:03 PM

பகிர்வுக்கு நன்றி,அகூதா.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#9 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 31 August 2012 - 11:47 AM

பகிர்வுக்கு நன்றி...

#10 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,310 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 31 August 2012 - 12:01 PM

நன்றி உங்கள் கவிதைக்கு




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]