மரண தண்டனை - காட்டுமிராண்டித்தனமா?
#1
Posted 30 August 2012 - 01:04 AM
அஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு.
இணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள்.
இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே தேர்ந்தெடுத்து ‘மரணதண்டனை எதிர்ப்பு’ பேசினால், அது எவ்வகையிலும் மனிதநேயத்துக்கு சார்பான ஒன்றில்லை. ஆபத்தான ஒருதலைபட்சமான செயல்பாடும் கூட.
ஒவ்வொருமுறை மரணதண்டனை குறித்த செய்திகள் வெளிப்படும் போதெல்லாம், அதை எதிர்த்து எழுதுவது எனக்கு சடங்காகி விட்டது. போதுமான அளவுக்கு எழுதிவிட்டபோதும், திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துவதின் மூலம் குறைந்தபட்சம் ஓரிருவரையாவது சிந்திக்க வைக்க முடிகிறது என்கிற திருப்தியைத் தாண்டி வேறெதுவும் கிடைப்பதில்லை. மாறாக இதற்காக நமக்குக் கிடைக்கும் எதிர்வினைகள் படுமோசமானவை. அடுத்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சல்களை தரவல்லவை.
இருப்பினும் மனிதன் என்கிற அடிப்படையில் இந்த காட்டுமிராண்டித்தனம் இந்தியாவில், உலகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதை ஆசையாக, கொள்கையாக வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
அஜ்மல் கசாப், முகம்மது அப்சல், தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் என்று எவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையும் இந்தியக் குற்றவியல் சட்டத்தை ’பல்லுக்குப் பல்’ காலத்திய கற்காலத்துக்கு கொண்டு செல்கிறது.
திரும்ப திரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து ‘தேசத்துரோகி’ பட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.
http://www.luckylook...og-post_29.html
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 30 August 2012 - 01:12 AM
கஸாப்பை தூக்கிலிடப் போவது யார்?
http://www.yarl.com/...howtopic=107280
இலங்கையில் மீண்டும் மரண தண்டனை
http://www.yarl.com/...howtopic=106300
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 30 August 2012 - 02:05 AM
உலகில் மரண தண்டனை உள்ள நாடுகள்
The information above is accurate as of 6 July 2012
Abolished for all crimes (98) மரண தண்டனை இல்லாத நாடுகள்
Abolished for all crimes except under exceptional/special circumstances (such as crimes committed in wartime) (7) - போர்குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மட்டும் மரணதண்டனை
Abolished in practice (under a moratorium or haven't used capital punishment in at least 10 years) (47) கடந்த பத்து வருடங்களில் நிறைவேற்றப்படவில்லை
Retainers of the death penalty (42) மரண தண்டனை உள்ள நாடுகள்
Edited by akootha, 30 August 2012 - 02:17 AM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#4
Posted 30 August 2012 - 09:38 PM
இதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவர்கள் இந்த கோரிக்கையில் கையெழுத்திடலாம் :
http://takeaction.am...urce=W1208EADP2
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 31 August 2012 - 01:18 AM
- சிறையில் உள்ளவர்கள் 2.3 மில்லியன்கள்
- இதில் பெரும்பான்மையானவர்கள், சிறுபான்மையினர் ( இலத்தீன் அமெரிக்கர்கள், கறுப்பினத்தவர்கள்)
- இவர்களுக்கு செலவிடும் பணம் 228 பில்லியன்கள்
http://www.deathpena...s-united-states
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
















