Jump to content


Tamil Star News
Photo

தமிழகத்தில் உண்ணாவிரதமிருக்கும் செந்தூரனின் உறவினர் அதிர்ச்சியால் மரணம்!


  • Please log in to reply
No replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,459 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 25 August 2012 - 06:19 AM

தமிழகத்தில் உண்ணாவிரதமிருக்கும் செந்தூரனின் உறவினர் அதிர்ச்சியால் மரணம்!
[Saturday, 2012-08-25 08:55:16]
Posted Image
விடுதலைக் கோரி, கடந்த, 19 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை வாலிபரை காண வந்த உறவினர், அதிர்ச்சியில் இறந்தார்.

இலங்கையில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல், தமிழகம் வந்தோரை, போலீசார் பல்வேறு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அதுபோல் வந்த செந்தூரன், பூந்தமல்லி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்ட போதிலும், விசாரணையை விரைந்து முடித்து, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளூர் மாவட்ட ஆர்.டி.ஓ., ரவிக்குமார் பேச்சு நடத்தியும், அவர் போராட்டதை கைவிடவில்லை.

இந்நிலையில், இலங்கையிலிருந்து செந்தூரனின் அத்தை கமலா தேவி, அவரது கணவர் தங்கவேல் மற்றும் கீர்த்தனா ஆகியோர், தமிழகம் வந்தனர். கடந்த, 21ம் தேதி, கமலாதேவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலா தேவியின் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியான தகவல்களை அவரிடம் கூறக்கூடாது என, எச்சரித்து இருந்தனர்.

ஆனாலும், செந்தூரன் உயிருக்குப் போராடும் தகவல், கமலா தேவிக்கு எட்டியது. சதா அவரை பற்றியே நினைத்து வருந்தியுள்ளார். இதனால், உடல் நிலை மிகவும் மோசமடைந்து இறந்தார். அவரது உடல் , போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
http://seithy.com/br...&language=tamil
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

Advert



Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]