சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான முடிவுகளை எடுக்கப் போகிறது இந்தியா – கொழும்பு ஆங்கில ஊடகம்
#1
Posted 22 August 2012 - 07:01 AM
கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது.
இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.
அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளதும் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
http://thaaitamil.com/?p=29574
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

#2
Posted 22 August 2012 - 08:22 AM
கைகட்டி, வாய்பொத்தி, மானம் மரியாதையை அடகு வைத்து சேவகம் செய்த போர்குற்றத்தின் பங்குதாரர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சீற்றம் விரைவில் தலைகீழாக மாறிவிடுவதே வரலாறு!
இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!
#3
Posted 22 August 2012 - 10:51 AM
- புலவர் likes this
#4
Posted 22 August 2012 - 10:55 AM
எத்தனை... நாளைக்குத்தான், மனதுக்குள்ளேயே... புழுங்கிக் கொண்டிருப்பது.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#5
Posted 22 August 2012 - 11:12 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#6
Posted 22 August 2012 - 01:46 PM
Aug 22, 2012
சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான முடிவுகளை எடுக்கப் போகிறது இந்தியா - கொழும்பு ஆங்கில ஊடகம்
அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது.
இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.
அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளதும் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
www.pathivu.com/news/21747/57//d,article_full.aspx
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#7
Posted 22 August 2012 - 02:29 PM
இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது.
அதைவிட எத்தனோ மடங்கு பெரிய பதிலடி, பயணத்தை நிறுத்தியவுடன் இலங்கை 8 விமானத்தளங்களை சீனாவுக்கு கொடுத்தது. இந்த சின்ன தீவில் எட்டு விமானத்தளங்களில் சீனா மாதிரி பலம் பொருந்திய நாடு கை வைத்திருந்தால் அமெரிக்கா மாதிரி நாடுகளுக்கே தீவை அண்டும் பலம் இருக்காது.
இந்தியா சீனாவின் பிரச்சனையாலேயே 1960 களுக்கு முன்னர் தொடக்கம், தென் பகுதிகளில் தனது அணு, ஆகாய ஆராச்சிகளை ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது. இதானாலேயே சீனா 1970 களில் இலங்கையை அணுகி பண்டாரநாயக்கா நினைவு மண்டபம் கட்டி இலங்கையை வாரி அணைக்க தொடங்கியது. சீனா தான் தனது முத்துமாலை திட்டங்களை விட இந்தியாவின் திட்டங்களுக்கு பதிலாக மிகவும் வெற்றிகரமான பதிலடி திட்டங்களையும் நீண்டகாலமாக போட்டு செயல்முறைப்படுத்தி வெற்றியும்கண்டு வருகிறது.
இதில் இந்திரா காந்தியின் திட்டங்களில் இருந்து விலத்திபோய் விட்ட காங்கிரசால் இலங்கையில் இனி ஒன்றும் செய்ய முடியாது. மேலும் சீனாவும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருக்கும் பிரதான இலக்குகளை தாக்குவதாயின் இலங்கையை இந்தியா மிரட்டி தனது கையுக்குள் போட முயல்வதை சும்மா பார்த்துக்கொண்டும் இருக்க முடியாது.
இந்தியாவின் வரவிருக்கும் கடுமையான முடிவுகளுக்கு, சீனாவும் இலங்கையும் ஏற்கனவே தங்கள் புலனாய்வுகளை வைத்து சரியான பதில்களையும் தயாரித்திருப்பார்கள். இதில் இந்தியா இனி மேலே போக ஒன்றும் இல்லை.
சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.
#8
Posted 22 August 2012 - 03:31 PM
இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.
#9
Posted 22 August 2012 - 04:27 PM
நேரு குடும்பத்திற்கும் இராஜபக்ச குடும்பத்திற்கும் காணி பிரச்சினை. அதற்குள் நாடுகளை ஏன் இழுக்கிறார்கள்?
இரண்டும் பெயரவில் மக்களாட்சி செய்யும் நாடுகளாக உள்ளதால்
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#10
Posted 22 August 2012 - 04:41 PM
இரண்டும் பெயரவில் மக்களாட்சி செய்யும் நாடுகளாக உள்ளதால்
உண்மை அண்ணா.
இயற்கை உணவு வருமுன் காக்கும் மருந்து.
Organic Food Is Preemptive Medicine.
#11
Posted 22 August 2012 - 05:38 PM
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரைத் துடைக்கவோ திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழி காணப்படவில்லை. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக் கதையாக உள்ளது. மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்றுவரை பலனில்லை.
தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அவரவர் இயல்புக்கும், அவரவர் சக்திக்கும் ஏற்றவாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் காதில் விழுந்ததாகவோ, அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவோ மத்திய அரசு முன்வரவில்லை. சுண்டைக்காய் நாடான இலங்கை இப்போது கூட, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். மீனவர் நிலைமையை பிரதமரிடம் விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
http://tamil.webduni...120822003_1.htm
Edited by akootha, 22 August 2012 - 05:39 PM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#12
Posted 23 August 2012 - 02:20 AM
கொம்பு சீவி விட்டவர்கள் அவர்கள் தானே வாங்கி முறியட்டும்.
.. .
இதுக்கேல்லாத்துக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது அதுதான் தமிழ் ஈழம்
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.
வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
#13
Posted 23 August 2012 - 05:06 AM
#14
Posted 23 August 2012 - 09:00 AM














