Jump to content


Tamil Star News
Photo

இன்று திறக்கப்படவிருந்த புதிய பிரதேசசபை கட்டடம் கழிவு ஓயில் ஊற்றி பாழ்! - ஆயுதமுனையில் சம்பவம்


  • Please log in to reply
8 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 August 2012 - 03:01 AM

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள்.

இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாயந்து காவலாளிகளை துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள். அதன் பின்னர் அவர்களின் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.

காவலாளிகளை துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாள அட்டைகளையும் பறித்தெடுத்துள்ளார்கள். அத்துடன் காவலாளிகள் மீதும் கழிவு ஒயிலினை தலையில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

காலாளிகளை தாக்கியும் விட்டு கட்டடத்தின்மேல் கழிவு ஒயிலை பரவலாக ஊற்றிவிட்டு வந்த வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட நபர்கள் வெளியேறும் போது காவலாளிகளை கட்டிடத்தின்பின்புறத்தில் உள்ள பற்றைகளுக்குள் கொண்டுபோய் போட்டுவிட்டு சென்றுள்ளார்கள்.

காவலாளி ஒருவர் தனது கட்டுக்களை அகற்றி தப்பிய நிலையில் மற்றைய காவலாளியையும் அவிழ்த்துவிட்டு இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று அவர்களின் தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேச சபைத் தலைவர் வீட்டிற்கு அறிவித்துள்ளார்கள்.

குறிப்பிட்ட இடத்திற்க்கு உடனடியாக வந்த தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். சுன்னாகம் பொலிசார் காவலாளிகளை அழைத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்.

அதேவேளை, குறிப்பிட்ட கட்டடத்தை வட மாகாண ஆணையாளரின் பணிப்புரைக்க அமைவாக கடந்த புதன் கிழமை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்த போதிலும் தவிசாளர் தாம் உடன் படிக்கை செய்ததன் பெயரில் தம்மிடம் கட்டடடம் கையளிக்க வேண்டும் என வலியறுத்தியமைக்க அமைவாக ஒப்பந்தகாரர் கட்டடடத்தை தவிசாளரிடம் கையளித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே தவிசாளருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரருக்கும் முரண்பாடு ஏற்பட்ட வேளையில், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தமக்கு ”ஆளுனர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார்” எனக்கூறி தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பகல் புதிய கட்டிடத்திற்கு பால் காய்ச்சி குடிபுக இருந்த நிலையில் தற்போது கட்டித்தின் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரிடையேயும் அரசின்பாலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://onlineuthayan...01344222528675#

Edited by akootha, 22 August 2012 - 03:01 AM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 August 2012 - 03:26 AM

முதலில் தவிசாளரின் நேர்மைக்கும் உறுதிக்கும் இனப்பற்றுக்கும் பாராட்டுக்கள்.

ஒட்டுக்குழுவுடன் இணைந்து ஆளுநர் என்ற சந்திரசிறி செய்யும் இந்த கேவலமான செயல்களுக்கு அங்கு அவசியம் செல்லும் செல்லும் புலம்பெயர் மக்களும் தான் தேவையான நிதியை சிங்களத்திற்கு கொடுத்து ஆதரவு தருகின்றனர்.

- ஐ.நா. நிலைமைகள் சீராகவில்லை என்கிறது

- பிரித்தானியா போவது கவனம் என்கிறது

- ஐரோப்பிய யூனியன் வர்த்தக சலுகையை முழுமையாக நிற்பாட்டிவிட்டது - காரணம் மனித உரிமைகள்


யாழ் குறுநில மன்னனும் குற்றவாளியுமான டக்கியிடம் பணமும் பொன்னாடையும் பெற்ற இந்த 'பாடகர்' இதையும் சென்று பார்க்கவேண்டும்.

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 Aasaan

Aasaan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,052 posts
  • Gender:Male
  • Interests:சமூக சேவை

Posted 22 August 2012 - 04:23 AM

சிங்களப் பயங்கரவாதி சந்திரசிறிக்கு இனிமேல் "கழிவொயில் சந்திரசிறி" என்ற பட்டத்தை வழங்கலாம்.
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.

இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!

#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,313 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 22 August 2012 - 06:36 AM

Posted Image

Posted Image

Posted Image


காவலர்களை, நிர்மாணமாக்கிவிட்டு பிரதேச சபை கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு


வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலாளர்களைக் கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவேனில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாய்ந்து காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள்.
அதன் பின்னர் அவர்கள் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.
காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் வைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாள அட்டைகளையும் பறி;த்தெடுத்துள்ளார்கள.; இத்துடன் காவலாளிகள் மீதும் கழிவு எண்ணெய்யை தலையில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.
காவலாளிகளைத் தாக்கி விட்டு கட்டித்தின்மேல் கழிவு எண்ணெய்யை பரவலாக ஊற்றிவிட்டு வந்த வாகனங்களில் தப்பிச்சென்றுள்ளார்கள்.
குறிப்பி;ட்ட நபர்கள் வெளியேறும் போது காவலாளிகளைக் கட்டிடத்தின்பின்புறத்தில் உள்ள பற்றைகளுக்குள் போட்டுவிட்டு; சென்றுள்ளார்கள்.
காவலாளி ஒருவர் தனது கட்டுக்களை அகற்றி தப்பிய நிலையில் மற்றைய காவலாளியையும் அவிழத்துவிட்டு இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கைத்தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேச சபைத்தலைவர் வீட்டுக்கு அறிவித்துள்ளார்கள்.
குறிப்பி;ட்ட இடத்துக்கு உடனடியாக வந்த தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உடன் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.சுன்னாகம் பொலிஸார் காவலாளிகளை அழைத்து முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்கள்.
குறிப்பி;ட்ட கட்டிடத்தை வட மாகாண ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாகக் கடந்த புதன் கிழமை கையேற்பதற்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்தபோதிலும் தவிசாளர் தாம் உடன்படிக்கை செய்ததன் பேரில் தம்மிடம் கட்டிடம் கையளிக்கவேண்டும் என வலியுறுத்தியமைக்கமைவாக ஒப்பந்தக்காரர் கட்டிடத்தை தவிசாளரிடம் கையளித்தனர்.
ஏற்கனவே தவிசாளருக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தமக்கு ஆளுநர் படைகளின் பாதுகாப்பு வழங்கியுள்ளார் எனக்கூறி தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று பகல் புதிய கட்டிடத்திற்கு பால் காயச்;சி குடிபுக இருந்த நிலையில் தற்போது கட்டித்தின் மீது கழிவு ஒயில் ஊற்றப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் பலரிடையேயும் அரசின்பாலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச கட்சியின் உறுப்பினர்கள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரகேசரி.

Edited by தமிழ் சிறி, 22 August 2012 - 06:48 AM.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#5 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 August 2012 - 05:34 PM

நீதவான் மீது மனித மல வீச்சு


சிலாபம் மேல் நீதிமன்றத்தின் கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவைப் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


கூண்டுக் கதவை திறந்தபோது வெளியே வந்த குறித்த நபர், தனது ஆசனத்தில் அமர்ந்திருந்த மேல் நீதமன்ற நீதவான் மலனி குணரட்ன மீது பொதி ஒன்றை வீசினார். இருப்பினும் அவர் வீசிய பொதி இலக்குத் தவறி சுவரில் போய் வீழ்ந்தது. இந்தப் பொதியை பொலிஸார் சோதனை செய்தபோது அதில் மனித மலக்கழிவு காணப்பட்டது.


http://www.tamil.dai...2-09-07-29.html

Edited by akootha, 22 August 2012 - 05:34 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,952 posts
  • Gender:Male

Posted 22 August 2012 - 05:59 PM

பயங்கரவாதிகளின் ஆட்சியில் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#7 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,780 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 22 August 2012 - 06:01 PM

யாரோடு நாம் வாழப்போகின்றோம் என்பதற்கான எச்சரிக்கை இது.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#8 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,177 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 22 August 2012 - 08:50 PM

டக்கு ஐரோப்பா வரும் போது நாமும் இந்த கழிவோயிலை பயன்படுத்தலாம்

#9 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 August 2012 - 09:57 PM

டக்கு ஐரோப்பா வரும் போது நாமும் இந்த கழிவோயிலை பயன்படுத்தலாம்


மேற்குலக அரசியல் காலாச்சாரம் கூறுகின்றது கூழ்முட்டை இல்லை பை (Pie) என்ற ஒருவித கேக்கை முகத்தில் அடிக்கலாம் என்று :D

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]