அடிப்படை தேவைகளான சுத்தமான நீர், உணவு, வீடு என்பனவற்றுடன் நீண்டகால பிரச்சினைகளான வழமை நிலைக்கு திரும்புதல், வாழ்வதாதாரத்தை வளர்த்தெடுப்பதற்காக தொடர்ச்சியான உதவி ஆகியன இன்னும் பூர்த்தியாக நிலையில் வடக்கு மக்கள் இருப்பதாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினே நன்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'இடம்பெயர்ந்த மக்களில் பெரும் பகுதியினரை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தினதும் மனித நேய சமுதாயத்தினதும் பாரிய சாதனைகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இன்னும் பல தேவைகள் வடக்கு மக்களுக்கு நிறைவேற்றப்படாமல் உள்ளன என அவர்கூறினார்.
'நன்கொடைகள் குறைந்து வருகின்றன. எனவே மாற்று வழிகளை தேட வேண்டியுள்ளது. பலமான தலைமைத்துவம், வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள், பொறுப்புக்கூறலை மேம்படுத்தல் என்பவற்றில் நாம் இப்போது கூடிய கவனம் செலுத்துகின்றோம் என அவர் கூறினார்.
'நன்கொடை வழங்கும் அமைப்புகள் 2006-2012 வரையான ஆறு வருடத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இலங்கைக்கான மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளன என அவர் தெரிவித்தார்.
கடந்த 10 வருடங்களில் உலகெங்கும் 800 இற்கு மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் கடமையின்போது இறந்ததாக அவர் கூறினார்.
2011 ஆம் ஆண்டில் மாத்திரம் 301 அனர்த்தங்களில் 30,000 பேர் வரையில் இறந்ததாகவும் 206 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் 366 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும் நன்டி கூறினார்.
ஐ.நா.பொதுச்சபை ஓகஸ்ட் 19 ஆம் திகதிணைய உலக மனிதாபிமான தினமாக பிரகடனம் செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு பாக்தாத் நகரிலிருந்த ஐ.நா. அலுவலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய குண்டுத்தாக்குதலில் 22 மனிதாபிமானப் பணியாளர்கள் இறந்ததை நினைவுகூறும் வகையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் 'நான் இங்கிந்தேன்' என்பதாகும். இது எவ்வளவு சிறிய தொகையினராக இருப்பினும் மக்களுக்கு உதவுவதாகும்.
இந்த நிகழ்வில் இராஜதந்திர சேவையினர் நன்கொடை வழங்கும் அமைப்புகள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் சிவில் சமூக உத்தியோகஸ்தர்கள் ஆகியோருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.
http://www.tamilmirr...1-19-45-27.html
அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இடம்பெயர்ந்த மக்கள்: ஐநா.
Started by
akootha
, Aug 22 2012 01:47 AM
1 reply to this topic
#1
Posted 22 August 2012 - 01:47 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 22 August 2012 - 02:33 AM
வவுனியா முகாம்களை அண்மை காலங்களில் காலியாக்குவதில் மகிந்த அரசு குறியாக உள்ளது.(மக்கள் எக்கேடு கெட்டால் தமக்கென்ன என்ற அரசின் நிலைப்பாடு).இதன் மூலம் வரும் ஐ.நா கூட்டத்தொடரில் இடைத்தங்கல் முகாமில் யாரும் இல்லை என்றும் எல்லோரையும் மீள்குடியேற்றம் செய்தாகி விட்டது என்று தொடர்ந்தும் பொய்யை சொல்வதற்கே ஆகும்.
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
- பிளேடோ
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














