Jump to content


Tamil Star News
Photo

நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மக்களுக்கு மலேசியா உதவி


  • Please log in to reply
3 replies to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,199 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 21 August 2012 - 11:10 PM

நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மக்களுக்கு மலேசியா உதவி

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக மலேசிய தமிழர் பேரவையின் தலைவர் என்.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய தமிழர் பேரவையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நிதி வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் ஐங்கரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மலேசிய அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் மீளமைப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மலேசிய தமிழர் பேரவை கடந்த 2009 ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தமிழர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் 11.7 மில்லியன் ரூபாய்களை வடக்கு விவசாய, சமூக மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளின் பொருட்டு வழங்கியுள்ளது.

வவுனியா, உள்ளிட்ட வட பிராந்தியத்தின் பலபகுதிகளுக்கு இந்த நிதியின் மூலம் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இதன்மூலம் வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் 625 மீள்குடிமர்த்தப்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளதாக ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 August 2012 - 11:18 PM

மலேசிய தமிழர் அமைப்பிற்கு நன்றிகள். ஆனால், கோத்தா + மகிந்தா + பசில் கூட்டம் தடுக்கவே முயலும். இருந்தாலும் இந்த முயற்சி சில உண்மைகளை வெளியில் கொண்டுவரும். மீண்டும் நன்றிகள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,619 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 21 August 2012 - 11:19 PM

நன்றிகள்..
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#4 tamil paithiyam

tamil paithiyam

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 594 posts
  • Gender:Male
  • Location:தமிழ் இருக்கும் இடமெல்லாம் இந்த தறுதலை இருக்கும்
  • Interests:பிடித்தது பிடிக்காதது
    படித்தது படிக்காதது
    நடித்தது நடிக்காதது
    செய்தது செய்யாதது
    எதை கேட்கிறீர் ???

Posted 22 August 2012 - 01:45 PM

இப்படி எல்லா நாடுகளும் செய்ய ஆரம்பித்தால் சிங்களன் பிழைப்பு ???????????????
பாதிகளுக்கு நடுவே மாட்டிகொண்டு விழிக்கும் பைத்தியம் நான் .
என் நிலை மெய்நிலை . எல்லோரும் சொல்வதோ மறநிலை.
மறநிலை மற்றவர் . மறக்கா நிலையில் என் மன நிலை .
இந்நிலையால் பிறர் கூறும் என்னிலை மறநிலை (பைத்தியம் )

!!! வாழ்க நம்மவர். வளர்க நம்மினம் !!!




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]