Jump to content


Orumanam
Photo

களப் போராளிகளின் பின்னாவது நிற்காவிடில் தமிழனாக இருப்பதற்கு தகுதியில்லை!


 • Please log in to reply
1 reply to this topic

#1 chinnavan

chinnavan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,714 posts
 • Gender:Male

Posted 20 August 2012 - 07:46 PM

மரண தண்டனைக்கு எதிரான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ்,
இந்தப் படத்தை பார்க்கும்போது, செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. உங்களுடைய உழைப்பு எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி.
களத்தில் இறங்கி போராடுகிற ஒரு களப்போராளியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை. அப்படி ஒரு தைரியம் உண்மையிலேயே இல்லை. சூழ்நிலை, சிறைக்குப் போக தயார்தான், சினிமா சூட்டிங் இருக்கு, கால்சீட், நான் போகலைன்னா அங்கு படம் எடுக்கிற 10 பேர் பொழப்பு கெட்டுப்போயிடும் என்று சொல்லுவதெல்லாம் சும்மா. ஏன் 4 படம் வேண்டாம் என்று விட்டுவிட்டு போராட வேண்டியதுதானே என்ன கெட்டுப்போய்விட்டது. அப்போ சுயநலம்.
களப் போராளிகளின் பின்னாடியாவது வந்து நிற்க வேண்டும். அதுவும் செய்யவில்லை என்றால், தமிழனாக இருப்பதற்கு லாயிக்கில்லை.
முத்துக்குமார், செங்கொடி தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான். தீக்குளிக்க ஏன் அவர்கள் ஆளானார்கள் என்றால் மிகப்பெரிய எழுச்சி தமிழத்தில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் இரண்டரை லட்சம் பேர் ஊர்வலம் போனார்கள். பல லட்சம் பேர் உள்ள தமிழகத்தில் அதுபோல் ஏன் நடத்தமுடியவில்லை. முத்துக்குமார், செங்கொடி தியாகத்த்துக்காவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப்பட வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள் எதுவென்றால் அந்த மூன்று பேரும் விடுதலை ஆன நாளாகத்தான் இருக்கும்.
இப்படிக்கு செங்கொடி ஒரு அற்புதமான படம். இருளர் சமுதாயத்தின் அவலத்தை அழகாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். இருளர் சமுதாயத்தின் அவலத்தை சொல்வதற்காகவே தனியாக ஒரு படம் எடுக்கலாம்.
இருப்பினும், செங்கொடி என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம், ஈழவிடுதலைக்கு ஆதரவு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
Posted Image
http://thaaitamil.com/?p=29437

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
 


ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 08:02 PM

நாம் எல்லோரும் குற்றவாளிகள் தான் - நடிகர் சத்யராஜ் பேச்சு!


http://www.yarl.com/...howtopic=106738

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]