Jump to content


Tamil Star News
Photo

“ அவதி தேசத்தின் அகதிகள் ”


  • Please log in to reply
2 replies to this topic

#1 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 20 August 2012 - 07:19 PM

கவிதையின் கவிதைகள் .

Posted Image
http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg

சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்!
மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்!
அவதிப்பட்ட அகதிகளாய்...
அநியாயமாய் விரட்டப்பட்டோம்!

வாழ்மனை முற்றம் சுற்றம்
சொந்தமண் எல்லாமே தூரவிட்டு,
அல்லாடும் வாழ்வோடு
தூரதேசங்களில் அடைக்கலமான...
அவதிதேசத்தின் அகதிகள் நாம்!

சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும்,
ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும்
பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக...
பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது!

மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள்
ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும்,
இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கதைகளும்,
எஞ்சிநிற்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளையும்
இல்லாமற் செய்துவிடுகின்றன!

நடந்தது நடக்கின்றது அனைத்தும் போக,
நடக்கப்போகும் எதிர்காலத்தில்...
என் ஒரே ஆசை,
என் ஊரில்தான் என்னுயிர் போக வேண்டும்!

  • குமாரசாமி likes this

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


Advert

#2 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 20 August 2012 - 11:12 PM

அருமையான கவிதை கோமகன்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#3 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 21 August 2012 - 02:15 PM

அருமையான கவிதை கோமகன்.


இந்தப்பெருமை எல்லாம் கவிதைக்கே போய்சேரவேண்டும் குசா . எவ்வளவோ வெளியில் சொல்லமுடியாத பிரச்சனைகளையும் , கவலைகளையும் மனதுக்குள்ப் புதைத்து தான் இல்லாவிட்டாலும் தனது ஆக்கங்கள் வந்து யாழ்இணையம் வளரவேண்டும் என நினைக்கின்றாரே கவிதை அங்குதான் அவர் நிற்கின்றார் . வருகைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]