Jump to content

Tamil Star News
Photo

தேசிய விடுதலைப் பாடல் பாடிய உன்னி கிருஸ்ணன் டக்ளஸிடமிருந்து நினைவுப்பரிசு பெற்றார்(காணொலி)

  • Please log in to reply
6 replies to this topic

#1 கலையழகன்

கலையழகன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 330 posts
  • Gender:Male

Posted 20 August 2012 - 06:44 PM

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞரும் திரையிசை பின்னணிப்பாடகருமான உன்னி கிருஸ்ணன் அண்மையில் நல்லூர்திருவிழாவை முன்னிட்டு இந்தியத்துணைத் தூதரகத்தின் அதிகாரி மகாலிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப் பூங்கா முன்னர் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட பூங்காவின் எச்சங்கள் அழிக்கப்பட்டு உன்னி கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது.

நிகழ்வினை இராணுவ துணைக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைப் பிரநிதித்துவப்படுத்தும் ஈபிடிபி நிர்வகிக்கும் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் போது முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா உரை நிகழ்த்தும் போது தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலப் பகுதி இருண்ட காலமாக விளங்கியதாகவும், தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதாகவும் உரை நிகழத்தினார். அதன் பின்னர் பாடகர் உன்னி கிருஸ்ணனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கியிருந்தார்.

Posted Image
யாழ்ப்பாணத்தில் இதேபோன்று இந்தியத் துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை ஏற்பாட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கொள்வார் என்று நிகழ்வு ஒன்றிற்கான அறிவிப்பினை யாழ்.மாநகர சபை அறிவித்திருந்த போதிலும் தமிழக மக்களின் உணர்வினை மதித்து ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தார்.

நல்லூர் ஆலய நிகழ்வினைக் காரணம் காட்டி இந்தியத் துணைத்தூதரகமும் ஈபிடிபியும் இணைந்து பாடகர் உண்ணிகிருஸ்ணனை யாழ்ப்பாணம் அழைத்து அவருக்கு அமைச்சர் டக்ளஸ் மூலம் நினைவுப்பரிசில்வழங்கியமை யாழ்.மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது. தமிழீழ எழுச்சிப்பாடல்கள் பலவற்றிற்கு பின்னணிக்குரல் வழங்கிய உன்னி கிருஸ்ணன் திட்டமிட்டே ஈபிடிபி நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருப்பதாக யாழ்.மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உன்னி கிருஸ்ணன் பாடிய தேசியவிடுதலைப் பாடல் ஒன்றிற்கான காணொலி வடிவத்தினை தமிழ்லீடர் மீள்பிரசுரம் செய்கிறது.

http://tamilleader.c...0-18-14-43.html

Edited by ஊர்பூராயம், 21 August 2012 - 06:01 AM.

“பொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப் போரை முறியடிப்பதே இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் முக்கியமான சவாலாகும்!. எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும் பணியைச் செய்ய வேண்டும்!”

-தமிழீழத் தேசியத் தலைவர்

BlackHeader_v4.png

Advert

#2 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,191 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 20 August 2012 - 07:05 PM

எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ?

#3 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 20 August 2012 - 10:09 PM

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

#4 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,191 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 20 August 2012 - 10:20 PM

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

அப்ப கே .பி சூழ்நிலைக் கைதி , உன்னி கேரளாக்காரர் அவரிடம் என்ன எதிர் பாக்கின்றீர்கள் :wub:

#5 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,696 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 20 August 2012 - 10:21 PM

நயன் மோங்க்யாவின்ட ரசிகன்..

கிந்தியாவின் வருங்கால விக்கட் கீப்பர் பெருமகன்..

இந்த மாறி டப்பா குரலை வச்சி கொண்டு எங்கிட்டு சங்கீதத்தை வளர்க்கிறது.. ரெல் ரெல் மீ...

அல்லகை என்று ஏதும் தெரியல ....சைலண்டா போயிட்டான் ஆளு.. ரோ ப்ரைன் வாஸ் பண்ணியிருப்பங்களா...மார்கெட்டு அவுட்டு... பினால்யிலுக்கும் பிளீச்சிங்குங்கும் அலைய சொல்லுது... சீர்காழி கோவிந்தராஜன் மாறி தமிழிசையை பாடுவாறுவாரா இவரு..? எதோ கழுதை குரல் போல இருந்தாலும் ரசிச்சிட்டு இருந்தம் ...நாங்கள் ... ஆனால் இதெல்லாம் ரொம்ப் ஓவர்.....தோழர்கள் கரெக்டா நோட் பண்ணிக்குங்க கரெக்ட் ரைமு கரெக்ட் டேட்டுக்கு இவர் குரல யானை மாறி யாழில் பிளீருது.. (இவங்களை தான் நீங்கள் வெளிநாட்டில் கூட்டி வச்சி கும்மியடிப்பிங்க அது வேற விடயம்)ஆனாலும் அவன் புத்தி(சப்புறமணிசாமி)புத்தி வேலை செய்யுது... :o :o

டிஸ்கி :

இதை போஸ்டர் ஒட்டி பெரிய விசயம் ஆக்கினால் தான் சரிப்பட்டு வரும்.. இல்லையென்றால் இதை போன்று கண்ட அல்லக்கை இதை முன்னுதரனமா எடுத்துகிடும் அபயம் உண்டு..ரெண்டே ரெண்டு கட்டுரை போடுங்க... அப்பத்தான் நம்மட ஜனம் .....நம்ம அரசியல தலீவர்கள் ....எல்லம் ரொம்ப தெளிவாகும்... :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன், 20 August 2012 - 10:34 PM.

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

#6 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 20 August 2012 - 11:25 PM

// எங்கள் தேசியப் பாடகர்களே டக்கியை புகழ்ந்து பாடி பொற்காசு வாங்கும் போது .உன்னி பாடினால் என்ன பாடாவிட்டால் என்ன ? //

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

அப்ப கே .பி சூழ்நிலைக் கைதி , உன்னி கேரளாக்காரர் அவரிடம் என்ன எதிர் பாக்கின்றீர்கள் :wub:

அன்பு உறவு நந்தன்26, எங்கள் தேசியப் பாடகர்கள் டக்கியை புகழ்ந்து பாடி போது எவ்வளவு அருவருப்புப் பட்டிருப்பார்கள் என்பதும் அதை நினைத்து எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதும் எம்போன்றவர்களுக்கு நன்கு தெரியும் அவர்கள் சூழ்நிலை கைதிகள் அவ்வளவுதான் இப்போதைக்கு.

#7 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,337 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 11:30 PM

நாளை இவரின் வாயாலேயே 'மலர்ந்தது தமிழீழம்' என பாடவைக்க வேண்டும் என்ற ஓர்மம் வரவேண்டும் எங்களுக்கு.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]