Jump to content


Orumanam
Photo

லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள்.


 • Please log in to reply
5 replies to this topic

#1 nochchi

nochchi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,037 posts
 • Gender:Male
 • Location:Germany
 • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 20 August 2012 - 05:29 PM

லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள்


Published on Saturday, 21 July 2012 12:59
Posted Image Posted Image
Posted Image
லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜித். ஆனால், 25 ஆம் தேதி வீட்டில் இருந்து ஜான் பைக் என்ற டாக்டருக்கு போன் செய்த ராஜ்வீந்தர், மாமியாருக்கு நெஞ்சு வலி, உடனே வாருங்கள் என்று அழைத்தார். அதன்படி வீட்டுக்கு சென்ற போது குளியல் அறையில் பல்ஜித் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது மண்டை உடைந்திருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மருமகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குளியல் அறையில் வழுக்கி தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்த போது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் ராஜ்வீந்தர். வீட்டுக்கு வந்ததில் இருந்து என்னை கேவலமாக திட்டிக் கொண்டே இருந்தார். நான் ஷவரில் குளிக்க சென்ற போது, என்னை வெளியில் இழுத்து போட்டு துடைப்பத்தால் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து சப்பாத்தி கட்டையால் தலையில் 20 முறை பலமாக அடித்தேன் என்று ராஜ்வீந்தர் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்த வழக்கு வின்செஸ்டர் கிரவுன் கவுன்டி கோர்ட்டில் நடந்தது.
வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பர்னெட், கொலை செய்தது மட்டுமல்லாமல் தடயங்களை மறைத்துள்ளார் ராஜ்வீந்தர். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். பரோலில் வெளிவர குறைந்தபட்சம் 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
நன்றி - srilankamirror.

http://www.srilankam...-07-21-07-29-32
"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"

ninaivu-illam

#2 Maruthankerny

Maruthankerny

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,579 posts
 • Gender:Not Telling
 • Location:USA
 • Interests:In Anything

Posted 20 August 2012 - 05:34 PM

நெடுக்கர் இங்காலே வரமுன்பு செய்தியை தூக்குவின்களா?
புண்ணியமா போகும்!
I dont hate anyland.....But Ilove my motherland

#3 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,929 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 August 2012 - 05:46 PM

:lol: :D :D
பாவம் அவர் கோயிலில் படம் பிடித்தபடி நிற்பார்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#4 கறுவல்

கறுவல்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 247 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 20 August 2012 - 11:36 PM

>நான் ஷவரில் குளிக்க சென்ற போது, என்னை வெளியில் இழுத்து போட்டு துடைப்பத்தால் அடித்தார்

செத்த மனிசி சாட்சி சொல்ல வரப் போகுதா என்ன?

#5 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,684 posts

Posted 20 August 2012 - 11:42 PM

உப்பிடித்தான் இந்தியர்கள் தங்களுக்குள் அடிபட்டுவிட்டு அவுஸ்திரெலியர்கள் தாக்குகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுவருகிறார்கள்.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#6 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,167 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 21 August 2012 - 12:13 AM

நெடுக்கர் இங்காலே வரமுன்பு செய்தியை தூக்குவின்களா?
புண்ணியமா போகும்!

உப்புடியான ஒரு பீதியை கிளப்பிவிட்டு........சிங்கனை சிங்கிளாகவே வைச்சிருங்க
http://www.youtube.com/watch?v=Hn_2eg5ZtEE :D :lol: :icon_idea:

Edited by குமாரசாமி, 21 August 2012 - 12:16 AM.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]