Jump to content


Orumanam
Photo

கூடங்குள மின்சாரம் முழுவதும் வேண்டும்: ஜெ


  • Please log in to reply
5 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 04:39 PM

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.

இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,டம்மி பியூல் எனப்படும் மாதிரி எரிபொருள் நிரப்பி, பின் அவற்றை அகற்றி, அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து விட்டன. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில், யுரேனியம் எரிபொருள் நிரப்ப, இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அனுமதியும் வழங்கியுள்ளது.


மூன்றாவது முறை:

இதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள், அடுத்த சில நாட்களில் நிரப்பும் பணி துவக்கப்பட இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா

இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, மீண்டும் அதை வலியுறுத்தும் வகையில் மூன்றாவது முறையாக நேற்றுகடிதம் எழுதியுள்ளார்.


அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க தாங்கள் உதவ வேண்டும் எனக் கோரி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் தங்களுக்கு நான் கடிதம் எழுதி இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்த கடிதங்களுக்கு தங்களிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. கூடங்குளம் அணு மின் நிலைய முதல் யூனிட்டில், அடுத்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்க இருப்பதாக நான் அறிகிறேன்.இந்த சந்தர்ப்பத்தில் என் முந்தைய வேண்டுகோளை தங்களுக்கு நினைவுபடுத்தி, விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில், தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். தங்களின் விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்தகடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ளதால், தமிழகத்தில் தற்போது மின் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தேவைக்கேற்ப மின் வினியோகத்தை வழங்குவதில், மின் வாரியம் தடுமாறி வருகிறது. இந்நிலையில், கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய தமிழகத்தின் அவசரத் தேவையை புரிந்து கொண்டு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.


http://tamil.yahoo.c...dGlvbnM-;_ylv=3

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,296 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 20 August 2012 - 07:37 PM

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை
பெறவேண்டியது தானே.
தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 08:08 PM

தமிழகம் பொருளாதார ரீதியாக முன்னேற மலிவான மின்சாரம் தேவை.

அதற்குபிறகே தானம் செய்ய வேண்டும் ( காவிரி பிரச்சனையில் படித்த பாடம்) .

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 23,135 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 20 August 2012 - 08:59 PM

மத்திய அரசைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களுக்கு நல்லது நடப்பதே மிகவும் விரும்பும் தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் மற்றைய மாநிலங்களுடன் பயிரவேண்டும் மற்றைய மாநிலங்களில் உள்ள நீர் உட்பட எந்த வளங்களையும் பகுந்தளிக்க மத்திய அரசுக்கு ஒருபோதும் மனம் வந்தது கிடையாது

வாழ்க உங்கள் தேசியப்பற்று வந்தே மாதரம் ஜே கிந் என்று கத்தி கொண்டு இருங்கோ ..... :D
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#5 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,783 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 20 August 2012 - 10:50 PM

ஏனைய மாநிலங்கள் மின்சாரம் தங்களுக்கு வேண்டுமெனில் சொந்தமாக ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து மின்சாரத்தை
பெறவேண்டியது தானே.
தமிழகத்துக்கே மின்சாரம் போதாத போது ஏன் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்?

தண்ணீரை அதிகமாக வைத்திருக்கும் கேரள மாநிலம் தமிழ் நாட்டுக்கு கொடுக்க முன் வரவில்லையே!!!



தோழர் நுணாவிலான் எப்பயுமே டமாஸ் தான் :) :) அந்த மின்சாரம் முழுவதும் தங்களுக்கே வரணும் எண்று கேரள முதல்வர் தெரித்துவித்து இருக்கார் :lol: :lol:

டிஸ்கி:

இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வெப்பாட்டி இதற்கு எதாவது மாற்று கருத்து இருக்கா...? :icon_mrgreen: :icon_mrgreen:

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#6 மல்லையூரன்

மல்லையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,827 posts
  • Gender:Male

Posted 21 August 2012 - 02:25 AM

மோடிதானே மின்சாரம் விற்க திரிகிறார். அங்கே மிஞ்சியிருக்கும் மின்சாரத்தையும் மிஸ்டர் சிங் தமிழ் நாட்டுக்கு பெற்றுத்தந்தால் என்ன?
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]