Jump to content


Orumanam
Photo

இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே ’டெசோ’ கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பரபரப்புத் தகவல்


 • Please log in to reply
3 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 01:30 PM

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டுக்கு இந்திய மத்திய அரசு தனது முழுமையான ஆதரவை வழங்கவில்லை என அரசியல் களத்தில் பேசப்பட்டுவரும் நிலையில், அந்த மாநாடு இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது என மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கையிலிருந்து சென்ற நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று பரபரப்புக் கருத்தை வெளியிட்டார்.

"புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி மஹிந்த அரசு மாபெரும் குற்றங்களைப் புரிந்துள்ளது. இந்நிலையிலும், அதன் போலித்தனமானதும், நம்பகத் தன்மையற்றதுமான நிலைப்பாடுகளி னால்தான் இந்திய ஆட்சியாளர்கள் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ள னர். இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும், கசப்பும் ஏற்படுவதற்கு இலங்கை அரசே காரணம்'' என்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற
பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டிற்கு இந்திய மத்திய அரசு தனது ஆதரவை வழங்கியது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளை இல்லாதொழிப்பதாகக் கூறி இலங்கை அரசு மாபெரும் குற்றச்செயல்களைப் புரிந்துள்ளது. இந்நிலையில், யுத்தம் இடம்பெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்ட இந்த அரசு முன்வரவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமெனக் கூறப்படுகிறது.

இதுதான் "டெசோ' மாநாட்டிலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து சிபாரிசுகளையும் இலங்கை அரசு அமுல்படுத்தவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டாது நம்பகத்தன்மையற்ற விதத்தில் இலங்கை அரசு செயற்படுவதனால்தான் இந்திய அரசும் ஆட்சியாளர்களும் அதன்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இலங்கை அரசின் இதுபோன்ற நிலைப்பாடுகள்தான் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசலும் கசப்பும் ஏற்படக்காரணம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் ஏன் நீங்கள் கலந்துகொண்டீர்கள் என என்னிடம் பலர் கேள்வி கேட்டனர். இந்த மாநாட்டை இந்திய அமைச்சரவையில் உள்ள ஓர் அரசியல் கட்சிதான் நடத்தியது. அதனால் நான் அதில் கலந்துகொண்டேன்.

அத்துடன், மக்களை சர்வதேசத்திடம் அடகுவைத்துக் கடன்வாங்கி அராஜக ஆட்சி நடத்தும் இந்தத் தேசத்துரோக அரசைப்பற்றிக் கூறுவதற்கு நான் தயாராகவே உள்ளேன். எனது நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதில் இலங்கை அரசின் நிலைப்பாட்டையும், அக்கறையையும் அறிந்துகொள்வதற்காக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு தடவை இங்கு வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கு சுமார் 150 நாடுகளின் பிரதிநிதிகளை நான் சந்திப்பேன். அவர்களிடமும் அரசின் செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்துவேன். அதுமட்டுமல்ல, தேவையேற்படின் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று இதுபற்றிக் கூற நான் தயாராகவுள்ளேன். இந்த அரசுக்கு எதிராக சர்வதேச சமூகத்தினரையும் ஒன்றுதிரட்ட நான் தயாராக உள்ளேன் என்றார்.

http://onlineuthayan...351338120426782

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 tamil paithiyam

tamil paithiyam

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 594 posts
 • Gender:Male
 • Location:தமிழ் இருக்கும் இடமெல்லாம் இந்த தறுதலை இருக்கும்
 • Interests:பிடித்தது பிடிக்காதது
  படித்தது படிக்காதது
  நடித்தது நடிக்காதது
  செய்தது செய்யாதது
  எதை கேட்கிறீர் ???

Posted 20 August 2012 - 02:14 PM

என் கண்ணிற்கு இப்போதெல்லாம் இவரும் மனோ கணேசனும் தான் மனிதர்களாக தெரிகிறார்கள்
 • nochchi likes this
பாதிகளுக்கு நடுவே மாட்டிகொண்டு விழிக்கும் பைத்தியம் நான் .
என் நிலை மெய்நிலை . எல்லோரும் சொல்வதோ மறநிலை.
மறநிலை மற்றவர் . மறக்கா நிலையில் என் மன நிலை .
இந்நிலையால் பிறர் கூறும் என்னிலை மறநிலை (பைத்தியம் )

!!! வாழ்க நம்மவர். வளர்க நம்மினம் !!!

#3 karu

karu

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,523 posts
 • Gender:Male
 • Interests:Tamil Poetry & literature

Posted 20 August 2012 - 09:23 PM

பாவம் இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கில்லை
S. K. RAJAH

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 August 2012 - 09:31 PM

இவ்வாறானவர்கள் சிங்களவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மகிந்தர் ஆட்சியும் பொருளாதாரமும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]