Jump to content


Tamil Star News
Photo

ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர், ஜப்பானில்... பலி!


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,262 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 20 August 2012 - 04:34 AM

Posted Image



ஜப்பானில் பயங்கரம்... ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி!


டோக்கியோ: ஜப்பானில் சாதாரண ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் அது என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பே பிரச்சினை உருவாகி விட்டது. இந்த கெட்டுப் போன ஊறுகாயை சாப்பிட்டு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனைகளில் தங்கியுள்ள முதியவர்கள்தான். இருப்பினும் சப்போரோ நகரில் கடந்த வாரம் 4 வயது சிறுமியும் இந்த கெட்டுப் போன ஊறுகாய்க்குப் பலியாகியுள்ளாள்.
இந்த சீனத்து முட்டைகோஸ் ஊறுகாயானது ஜப்பானில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் ஆகும்.ஆனால் இந்த ஊறுகாய் உயிர்ப்பலி வாங்கியுள்ளது ஜப்பானியர்களை அதிர வைத்துள்ளது. இதற்கு முன்பு இப்படி ஊறுகாய்க்கு மரணமடைந்த வரலாறு ஜப்பானில் இல்லை என்பதால் இந்த ஊறுகாயை தற்போது ஜப்பானியர்கள் எமனாக பார்க்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி தற்ஸ்தமிழ்.

Edited by தமிழ் சிறி, 20 August 2012 - 04:34 AM.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]