இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கையில் பிறந்த ராதிகா சிற்சபேசன், தனது குடும்ப்தினருடன் 5ஆவது வயதில் கனடாவில் குடியேறினார். தற்போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருது அரசியல், பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், மனிதஉரிமை போன்ற துறைகளில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://dbsjeyaraj.co...j/archives/9732
in tamil http://www.puthinapp...?20120820106834
Edited by BLUE BIRD, 20 August 2012 - 03:44 AM.





















