Jump to content


Orumanam
Photo

தீபச்செல்வனின் "ஈழம் மக்களின் கனவு " நூல்


 • Please log in to reply
4 replies to this topic

#1 nochchi

nochchi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,035 posts
 • Gender:Male
 • Location:Germany
 • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 19 August 2012 - 05:43 PM

Posted Image


ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்

வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு

ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுதலின் குரல்' என்ற தலைப்பிலே பொத்தகம் பற்றியதான ஒரு பார்வையுடன் இதழ்கள் விரிகிறது. உள்ளடக்கத்தைக் கடந்தால் 'ஈழத்து மக்களும் அவர்களது கனவுகளுமே எனது ஆதர்சம்' என்ற தலைப்பினூடு சோபாசக்தியுடன் ஒரு கருத்தியல் யுத்தத்தையே நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த நூலைச் சிலர் வாசித்திருப்பீர்கள். சிலர் படித்திருப்பீர்கள். எனக்கு இதனை அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. எங்களைப்பற்றி நாமே, எமது அவலங்களை வாசித்தல் என்பது இயலாது. தமிழரின் அரசு நோக்கிய அரசாட்சி இருந்தகாலத்தில் தாயகம் சென்றோருக்கு அதன் வலிகள் புரியும். ' கிளிநொச்சியின் கதை' வலிகளையும் ' நிலம் வென்ற சனங்களின் கதை ' ஒரு நம்பிக்கையும் எம்முள்ளே விதைத்து நகர்கிறது.

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

Edited by nochchi, 21 August 2012 - 02:44 PM.

 • வல்வை சகாறா and விசுகு like this
"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"

ninaivu-illam

#2 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,923 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 19 August 2012 - 05:46 PM

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#3 kssson

kssson

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 336 posts

Posted 19 August 2012 - 05:52 PM

எங்களைப்பற்றி நாமே, எமது அவலங்களை வாசித்தல் என்பது இயலாது

உண்மையான வார்த்தைகள்.இவற்றை நாம் வாசிக்கவில்லை என்பதால் எமது மக்களின் அவலத்தை உணராதவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஈழமே மக்களின் கனவு.

#4 nochchi

nochchi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,035 posts
 • Gender:Male
 • Location:Germany
 • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 21 August 2012 - 02:47 PM

இந்த இடத்திலே துணிவோடு துயரங்களையும் அவலங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துக் கருவாக்கி எமது கைளில் உலவவிட்டுள்ள 'எழுதுகோல் போராளி' தீபச்செல்வனுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.


நன்றிகள்


உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலில் உரிமைகள் தொடர்பாக ஒரு குமுகாயவாதியாக நிற்றல் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது.
"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"

#5 nochchi

nochchi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,035 posts
 • Gender:Male
 • Location:Germany
 • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 21 August 2012 - 02:52 PM

[/size][/font][/color]உண்மையான வார்த்தைகள்.இவற்றை நாம் வாசிக்கவில்லை என்பதால் எமது மக்களின் அவலத்தை உணராதவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஈழமே மக்களின் கனவு.

ksssonகருத்துக்கு நன்றிகள்

மக்களின் அவலத்தை உணர்ந்தோரென்பதால்தான் இங்கே யாழில் தமது உள்ளக் குமுறல்களை கவியாக, கதையாக, நகையாக, கருத்தாக எனப் பகிர்ந்து கொள்கின்றார்கள். இதுபோன்ற நூல்களை எம்மவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பதிவிட்டேனன்றி வேறில்லை.
"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]