அக்காவின் நண்பி
#1
Posted 17 August 2012 - 12:57 PM
அவவுக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது என்பதை அவவின் முகத்தில் தெரிந்து கொண்டேன்.
முந்தைய நாள் இரவு தான் எனக்கு அவவை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்த்தவர்களை திரும்ப பார்க்க செய்யும் அழகு அவ.
எனது அக்காவின் உயிர் நண்பி அவ.
பழைய நினைவுகளை ஒருமுறை மீட்டி பார்க்கிறேன்.
தலையை பின்னியபடி, கைகளிலே சொக்கிலேட்களுடன், நெஞ்சிலே கோல்சரும், கைகளிலே இறுக்க பிடித்தபடி சுடுகருவிகளும் அவர்கள் நடந்துவரும் அழகே தனி அழகுதான்.
அக்கா ஏ எல் படிக்கும்போது, ஒரு நாள் அம்மாவிடம் பயித்தம் பணியாராம் சுட்டு தர சொல்லிவிட்டு, எப்படியும் அம்மா எடுப்பா என்று மா பேணிக்குள் கடிதம் எழுதி வைச்சிட்டு இயக்கத்துக்கு போனவ தான். அன்றைய நாள் வீட்டிலேயே சாவு விழுந்த மாதிரி எல்லாரும் அழுகை தான். இன்றும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது.
அக்கா தன் இயக்க நண்பிகளுடன் எப்பாவது இருந்திட்டு தான் வீடுக்கு வருவா. அன்றைக்கு வீட்டிலேயே பெரிய விருந்து தான். கோழி அல்லது ஆடு சமைச்சு எல்லாரும் புடை சூழ சாப்பிடுவோம். அன்றைக்கும் அப்படி தான், அக்காவுடன் வந்திருந்தா யாழினி அக்கா. எனக்கு என்னமோ அவவை பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. சிலரை அப்படி தான் பார்த்தவுடனேயே பிடிக்கும். சிலருடன் எவ்வளவு நாள் பழகினாலும் அவ்வளாவாக பிடிக்காது.
யாழினி அக்கா, என்னை மடியில் இருத்தி சொக்கிலேட் தருவா. படிச்சியா என்று கேட்டு பாட புத்தகங்கள் வாங்கி பார்ப்பா. ஒரு முறை அம்மா அடிச்சு நான் சாபிடாமல் இருந்த போது தானே தன கையால் சோறு குழைத்து ஊட்டி விட்டா. இன்றும் அந்த சோற்றின் ருசியை நான் யார் ஊட்டும் போதோ கண்டதில்லை.
இத்தனை வருடங்களுக்கு பிறகு யாழினி அக்காவை இப்போது தான் பார்க்கிறேன். மங்கிய குமிழ் பல்பில் அக்கா அப்படியே தான் இருக்கிறா.
அவ ஒரு தற்கொலைப்போராளி என்று எனக்கு அன்று தான் தெரியும். விடிந்தால் இலக்கை தாக்க வேண்டும்.
அதிர்ச்சியை வெளியிலே காட்டாமல் திட்டத்தை விளங்கபடுத்தி கொண்டிருந்தேன். ஆறுமாத தகவல் சேகரிப்பின் பின் உருவான பக்கா திட்டம் அது.
வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரை வீதிகள், புகையிரத பாதைகள் என்று அலைந்து அலைந்து போட்ட முதலாவது திட்டம் அங்கீகரிக்கப்படவில்லை. கொம்பனி வீதிக்காக வளையும் அந்த புகையிரத பாதையில் மெதுவாகும், காலி - கொழும்பு புகையிரத்தின் மேல் கூரையில் இருந்து, பம்பலபிட்டி - கொள்ளுபிட்டி எல்லையில் அமைத்திருக்கும் அமைச்சின் அலுவலக இரண்டாவது மாடியை நோக்கிய ஆர் பி ஜி தாக்குதலுக்கான திட்டம் அது. இரண்டு முறை புகையிரத்தின் மேல் ஏறியும் ஒத்திகை பார்த்தாயிற்று. அமைச்சரின் வருகை நேரம்,புகையிரதம் கடக்கும் நேரம் எல்லாமே சரியாக இருந்தும்,தற்கொலை போராளி தேவையற்ற,
அந்த தாக்குதல் அங்கீகரிக்கப்படவில்லை .
பழு தூக்கியினுள் இருந்து, திறக்கும் நேரம் எதிர்பார்க்காத தாக்குதலை தொடுக்கும், இரண்டாவது திட்டமே நடைமுறைக்கு வந்தது. கர்ப்பிணி பெண்போல வேடமணிந்து, வயிறு நிறைய வெடி சுமந்து, காலையில் யாழினி அக்கா புறப்பட்டு முன்னர், என்னை கண்ணீருடன் கட்டி அணைத்தா. எனக்கு சோறு ஊட்டிய அக்காவை வெடி சுமந்து அனுப்பும் போது நான் பட்ட நெஞ்சின் வலி யார் அறிவார்.
எனக்கு ஒரு செஞ்சோற்று கடன் பாக்கி இருந்தது. அன்றைய காலை உணவை நானே குழைத்து யாழினி அக்காவுக்கு ஊட்டினேன்.
அவ இந்த மக்களுக்காக தன்னுயிரை விடும்போது நான் ஊட்டிய அந்த காலைச்சாப்பாடு செமிச்சிருக்க நியாயமில்லை.
(யாவும் கற்பனை அல்ல)
- SUNDHAL, akootha, விசுகு and 8 others like this
உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை

#2
Posted 17 August 2012 - 02:13 PM
நாம் வாழும் வாழ்க்கை, அதில் நாம் நாம் சுயமான முடிவுகள், எமக்கென நாம் வரையும் இலட்சிய நோக்குகள் - இவை அனைத்தும் எம்மை யார் என முடிவு செய்யும் காரணிகள்.
வாழ்க்கை கற்பனை அல்ல.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 18 August 2012 - 02:07 PM
உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை
#4
Posted 18 August 2012 - 04:49 PM
எதை எழுதினாலும் அவற்றை மாவீரருக்கு சமர்ப்பிக்கும் தங்கள் பணியை மெச்சுகின்றேன்.
வாழ்க நலமுடன்.
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#5
Posted 18 August 2012 - 05:39 PM
#6
Posted 18 August 2012 - 06:19 PM
ஆக்கத்திற்கு நன்றிகள் அபிராம்.. வீரவணக்கம்..!
#7
Posted 18 August 2012 - 06:29 PM
யாழினிக்கு வீர வணக்கம்!
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#8
Posted 18 August 2012 - 09:06 PM
#9
Posted 19 August 2012 - 04:36 PM
தாயக கனவை மனதிலிருத்தி
எதை எழுதினாலும் அவற்றை மாவீரருக்கு சமர்ப்பிக்கும் தங்கள் பணியை மெச்சுகின்றேன்.
வாழ்க நலமுடன்.
நன்றி விசுகு அண்ணா. ஏதோ எங்களால் முடிந்தது. விடிவின் பின் வெளிவர வேண்டியவை, வராமலே போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன் அண்ணா.
உங்கள் மன உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனாலும் நான் எவ்வளவோ எழுதிவிட்டு, தணிக்கை செய்து செய்து தான் கடைசியாக தான் இந்த கதையை இப்படி எழுதினேன். அவர்களது வரலாறுகளோ வீரங்களோ தியாகங்களோ தெரியாமல் போககூடாது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. இருந்தும் காலத்துக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் முழுமையாக எழுதும் காலம் என் ஆயுளுக்குள் வரும் என்று நான் நம்புகிறேன்.கற்பனை அல்ல என்று சொன்னால் .அப்போது ஊர் பேர் வெளித்தெரியாமல் போனவர்களது . வரலாறுகள் இனியும் வெளித்தெரியாமல் போகக்கூடாது .மண்ணுக்காக போனவர்களின் தியாகங்கள் மண்ணுக்குள் போவதை எப்படி அனுமதிப்பது .
அதுவரை சம்பவமாக ஆவது அவர்களது தியாகங்களை வெளியில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கும் உணர்வுக்கும்.
நாங்கள் காணொளியில் பார்த்தமே.. அந்த அக்காவா?
ஆக்கத்திற்கு நன்றிகள் அபிராம்.. வீரவணக்கம்..!
உங்கள் பதிவுக்கு நன்றி இசை.
நீங்கள் குறிப்பிடும் சம்பவம் இல்லை.அதற்கு முதலே இடம்பெற்றது. வெற்றியளிக்கவில்லை.
நன்றிகள் அபிராம்!
யாழினிக்கு வீர வணக்கம்!
உங்கள் கருத்துக்கு நன்றிகள் அலைமகள்.
பதிவுக்கு நன்றி அபிராம். இப்படியான் படைப்புகளோடு யாழினி அக்கா போன்ற பலர் நினைவு கூறப்படுகிறார்கள்.
உண்மைதான் ஈஸ். நினைவு கூறப்பட கூட முடியாத தியாகங்களை விரும்பி செய்வது என்பது, எங்கள் மண் மீது ,எங்கள் மக்கள் மீது அவர்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவர்களுக்கு கைமாறாக நாங்கள் என்ன செய்துவிட்டோம் என்ற எண்ணமே, எங்களை காலம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல போதுமானது.
நன்றிகள் உங்கள் பதிவிற்கு.
இந்த பதிவிற்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்த யாழ்கவி, புங்கையூரான், ரதி, யாயினி, ஜீவா ஆகியோருக்கும் என் நன்றிகள்.
Edited by அபிராம், 19 August 2012 - 04:44 PM.
உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை
#10
Posted 27 August 2012 - 07:01 AM
விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடைபெற்ற இப்படியான தியாகங்கள்
ஆனால் முள்ளிவாய்க்காலோடு விடிவு என்பது எட்டாக்கனியாகிவிட்டதா?.
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.
http://kanthappu.blogspot.com/
#11
Posted 29 August 2012 - 01:54 PM
நிச்சயமாக தியாகங்கள் வீண்போகாது. நிச்சயம் விடிவு வரும் அண்ணா.
பதிவை விரும்பிய சுண்டலுக்கும், தமிழினி அக்காவுக்கும் நன்றிகள்.
உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை















