ஆயென்ரீனா நல்ல தெரிவாக படவில்லை. அரசியல் மன மாற்றம் ஏற்படுத்த வாசிங்டன், லண்டன், டெல்கி நல்ல தெரிவு. மக்களை அழைக்க வேண்டுமாயின் ஐரோப்பா, நியு யோர்க், கனடா நல்ல தெரிவு. உடனடி உபயோகம் இருக்க வேண்டுமாயின் கொழும்பில் வைக்க வேண்டும்.
புலம் பெயர் மக்கள் மகாநாட்டை எதிர்த்தது, இதை வைத்து கருணாநிதி அரசியல் லாபம் தேடமுயலக்கூடாது என்பதாலேயே. அப்படி செய்யும் போது அதில் பலன் அடைவது டெல்கியும், கொழும்புமேதான். இதில் கேள்விக்கு இடமில்லாமல் மகாநாடு அரசியல் லாபத்திற்கவேதான் கூட்டப்பட்டது. நிச்சயமாக தமிழ் நாட்டுக்கு வெளியில் இந்த கூட்டம் நடந்திருந்தால் புலம் பெயர் மக்களின் எதிர்ப்பு இருந்திருக்காது. கூட்டத்தை திட்டமிடலில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தலைவர்களின் பங்கு இருந்திருந்தால் புலம் பெயர் மக்களின் ஆதரவும் பெறப்பட்டிருக்கும். முன்னர் மனோகனேசன் கூறியிருந்த மாதிரி தமிழ்நாட்டு அகில தமிழ் கட்சிகளின் கூட்டமாயிருந்திருந்தால் இலங்கை,இந்தியா கலங்கியிருக்கும்.
இதில் கருணாநிதி, ஈழத்தமிழர்களின் தீர்வு விசையத்தில் தம்மை சம்பந்த படுத்த விரும்பும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து அமெரிக்கா, நோர்வே, சுவீடன், போன்ற நாட்டுகளின் பிரதிநிதிகளையும் வரவழைத்திருந்தாராயின், டெல்கிக்கு ஒரு செய்தி சொல்லி இருக்க முடியும்.
மகாநாட்டால் கருணாநிதி டெல்கியின் காலடியில் விழுந்தளவுக்கு, டெல்கி இலகுவில் ஈழத்தமிழரின் நலன்களுக்கு கருணாநிதியிடம் வளைந்து கொடுக்கவில்லை. அதாவது இந்த சரணாகதி அரசியலை டெல்கியிடம் கருணாநிதி செய்ததால்தான் முள்ளிவாய்க்காலில் டெல்கி இரசாயனக்குண்டுகள் போடும் போது தான் உண்ணாவிரதநாடகமாடி டெல்கி செய்த போர்க்குற்றங்களை மறைக்க வேண்டிய நிலைக்கு டெல்கியால் காலின் கீழ் போட்டு மிதிக்கப்பட்டார். தமிழ் நாட்டின் அடிமை நிலையில் சிறிதளவு தன்னும் மற்றம் ஏற்பட்டது ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர்தான். இப்போ இந்த மகாநாட்டை கண்டு டெல்கி பயந்ததில்லை. ஜெயலலிதாவை கண்டு டெல்கியின் மனதில் ஏற்பட்டிருந்த மெல்லிய பீதியும் மகாநாட்டின் பின் கலையத் தொடங்கியிருக்கும். ஜெயலலிதா இலங்கை பிரதிநிதிகள் வரும் போது தனக்கு அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப மத்திய அரசு ஒத்துத்தான் போகிறது. ஜெயலலிதா இலங்கை இராணுவத்தை தமிழ் நாட்டில் பயிற்றுவிக்க வேண்டாம் என்றால் மத்திய அரசு செவிமடுத்தேதான் ஆகிறது. ஆனால் ஈழம் என்ற தமிழ் சொல்லை மகாநாட்டில் பாவிக்க கருணாநிதி மத்திய அரசிடம் காலில் விழுந்துதான் அனுமதி பெறுகிறார். இந்த மகாநாட்டால் கருணாநிதி தமிழ்நாட்டில் இதுவரையில்அங்கே இருக்காத எதாவது புதிய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் மத்திய அரசை ஜெயலலிதா இடித்து இடித்துப் பெற்ற சிறிய இடைவெளியையும், மத்திய அரசிடம் மகாநாட்டில் தமிழ் பேச காலில் விழுந்து அனுமதி வாங்கி மத்திய அரசுக்கு திரும்பவும் விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே வைத்துக்கொள்ள வேண்டும். துணிச்சலாக "ஈழம்" என்ற வார்த்தையை பேசிவிட்டு ஒரு வழக்கை நடத்தி டெல்கியை வெல்ல திராணி இல்லாமல் எதற்காக இந்த மகாநாட்டை நடத்தினார்?
Edited by மல்லையூரான், 15 August 2012 - 03:43 PM.