Jump to content


Orumanam
Photo

தமிழகத்தில் எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு -விக்ரமபாகு.


 • Please log in to reply
1 reply to this topic

#1 chinnavan

chinnavan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,743 posts
 • Gender:Male

Posted 14 August 2012 - 11:12 AM

ஐக்கிய நாடுகள் சபையால் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்று இலங்கையில் உள்ள இடதுசாரிக் கட்சியான நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்ததாவது:இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும். உலகெங்கும் உள்ள தமிழர்களைக் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களைத் திரட்டி எழுச்சி ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
சென்னையில் நடந்த டெசோ மாநாடு மக்களைத் திரட்டும் முயற்சி என்பதால் அதில் கலந்து கொண்டேன். இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.
சிங்கள தேசியவாதம் என்று கூறி தமிழர் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் குடும்பத்தினர் கொள்ளையடித்து வருகின்றனர்.
தமிழர் மறுவாழ்வுக்காக ராஜபக்ச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும்.
அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்.
அதற்காகவே நான் இப்போது டெசோ மாநாட்டுக்கு வந்துள்ளேன் என்றார் கருணாரத்ன.
டெசோ மாநாட்டில் பேசிய கருணாரத்ன, தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அவருக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த சிங்கள அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் தனது பயணத்தை தள்ளிவைத்துவிட்டு சென்னையிலேயே கருணாரத்ன தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
http://thaaitamil.com/?p=28760

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
 


ninaivu-illam

#2 tamil paithiyam

tamil paithiyam

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 594 posts
 • Gender:Male
 • Location:தமிழ் இருக்கும் இடமெல்லாம் இந்த தறுதலை இருக்கும்
 • Interests:பிடித்தது பிடிக்காதது
  படித்தது படிக்காதது
  நடித்தது நடிக்காதது
  செய்தது செய்யாதது
  எதை கேட்கிறீர் ???

Posted 15 August 2012 - 11:20 AM

சாது மிரண்டா காடு கொள்ளாது . சரிதான் ஆனா சாதுக்களை எல்லாம் சப்பையாக்கி வேச்சுருக்கான்களே எங்க ஊரு தலைகள்
பாதிகளுக்கு நடுவே மாட்டிகொண்டு விழிக்கும் பைத்தியம் நான் .
என் நிலை மெய்நிலை . எல்லோரும் சொல்வதோ மறநிலை.
மறநிலை மற்றவர் . மறக்கா நிலையில் என் மன நிலை .
இந்நிலையால் பிறர் கூறும் என்னிலை மறநிலை (பைத்தியம் )

!!! வாழ்க நம்மவர். வளர்க நம்மினம் !!!


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]