Jump to content


Tamil Star News
Photo

சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர்


  • Please log in to reply
10 replies to this topic

#1 nochchi

nochchi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,652 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 13 August 2012 - 04:11 PM

சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர்




Posted ImagePosted Imageசர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள் முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த திரு. சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு செய்தார்.
பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்த முர்த்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தமிழீழ உணர்வாளரும் நீண்டகாலச் செயற்பாட்டாளருமான திருமதி சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் திரு. சிவந்தனுக்கு பழச்சாறு வழங்கி அவரது போராட்த்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடரந்து நடைபெற்ற கூட்டத்தில் திரு. ஜெயானந்தமூர்த்தி, திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன், திரு. கந்தையா இராஜமனோகரன், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியக்கிளை பொறுப்பாளர் திரு. தனம், தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. சோபி சிவச்சந்திரன் ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள்.Posted ImagePosted Image

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலர் திரு. வை.கோ, தமிழர் பொதுவுடமைக்கட்சியின் தலைவர் திரு. பெ. மணியரசன் ஆகியோரது உரைகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
Posted Image
நிறைவாக திரு. சிவந்தன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் கடந்த இருபதியிரண்டு நாட்களும் தன்னோடு இணைந்து செயலாற்றிய இளையவர்களையும் மற்றவர்களையும் தோழமையுடன் நினைவுகூர்ந்தார். நாற்பதாயிரம் மாவீர்களது தியாகத்தினால் ஏற்பட்ட ஆத்மபலமே தன்னால் இப்போரட்டத்தை உறுதியுடன் மேற்கொள்ள உதவியது, இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தார்.

மாலை 5.45 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த்தும், அவ்விடத்திலிருந்து வெளியேறி, ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image

Posted Image

Posted Image

http://www.eeladhesa...niraivu (6).jpg

http://www.eeladhesa...iraivu (10).jpg


நன்றி - ஈழதேசம்
Posted Image"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"Posted Image



Posted Image





Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 13 August 2012 - 04:14 PM

அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,712 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 13 August 2012 - 04:18 PM

நன்றி உறவுகளே

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#4 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,041 posts
  • Gender:Male

Posted 13 August 2012 - 04:38 PM

சிவந்தனுக்கும் பங்கு பற்றிய உறவுகளுக்கும் நன்றி

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 


#5 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,984 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 13 August 2012 - 04:49 PM

சிவந்தன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

 

நட்புடன்......யாயினி.

 


#6 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 13 August 2012 - 05:26 PM

சிவந்தனின் உண்ணா விரதம், லண்டன் ஒலிம்பிக்கில்... கலந்து கொள்ள வந்த சர்வதேச நாட்டவரை... கவர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
நன்றி சிவந்தன்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#7 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,201 posts
  • Gender:Male

Posted 14 August 2012 - 01:45 AM

நன்றிகள், சிவந்தனுக்கும், அதற்கு உதவிய உறவுகளுக்கும்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#8 eelapirean

eelapirean

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,003 posts
  • Gender:Male
  • Location:தமிழீழம்

Posted 14 August 2012 - 02:13 AM

மழுங்கிக் கொண்டு போகும் தமிழரின் உணர்வுகளை தட்டியெழுப்பிய தம்பி சிவந்தனுக்கு பாராட்டுக்கள்.

இருப்பாய் தமிழா நெருப்பாய்

இருந்தது போதும் செருப்பாய்


#9 மகம்

மகம்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 218 posts
  • Gender:Male
  • Location:இங்கும் அங்கும்
  • Interests:விடுதலைக்கான விடாமுயற்சி

Posted 15 August 2012 - 07:14 PM

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரர் சிவந்தனுக்கும், ஆதரவு வழங்கிய எல்லாமக்களுக்கும்
எனது வணக்கங்கள்; வாழ்த்துகள்; நன்றிகள். இறுதிநாளில் பெருமளவில் திரண்டுவந்த உறவுகளுக்கு சிறப்பாக
நன்றி சொல்லவேண்டும். சோர்ந்துவிடாமல் நமது போராட்டத்தைத் தொடர்வோம். மேலும்மேலும் கூடிய
புத்துணர்ச்சி பெற இவை உதவுவதாக இருக்கட்டும்!

#10 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,305 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 15 August 2012 - 10:05 PM

சிவந்தனுக்கும் பங்கு பற்றிய உறவுகளுக்கும் நன்றி ..
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#11 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,603 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 15 August 2012 - 10:18 PM

சிவந்தனுக்கும் கலந்துகொண்ட உறவுகளுக்கும் நன்றிகள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]