எம்மில் பலரும் திறமைகள் இருந்தும் பல சவால்களால் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அதில் ஒன்று பணம். அந்தவகையில் இலவச ஆனால் தரம் கூடிய மென்பொருட்கள் பற்றி இந்த திரியில் பார்க்கலாம்
பொதுவாக ஆங்கிலத்தில் Open Source என அழைக்கப்படும் காப்புரிமை அற்ற இலவச இல்லை சிறுதொகை மென்பொருட்கள் பணத்தை சேமிக்கவும் தரமாக வடிவமைப்புக்களை செய்யவும் உதவுகின்றது.
நிழற்படங்களை வடிவமைத்தல்
எம்மில் பலரும் கையில் நிழல்படகருவிகளை வைத்து விருப்பியவர்களை இல்லை இயற்கைகளை இல்லை கூகிளில் சுட்ட படத்தை எமது கருவிகளில் அமுக்கி விட்டாலும் சில வேளைகளில் சில மாற்றங்களை செய்ய விரும்புவோம். அதற்கு பாவிக்ககூடிய மென்பொருள் பல உள்ளன, அதில் ஒன்று GNU Image Manipulation Program, or GIMP : http://www.gimp.org/
பிரபல்யம் வாய்ந்த போட்டி சொப் போலவே கற்க கடினமானது ஆனால், இலவசம்.
http://www.gimp.org/...als/The_Basics/
Edited by akootha, 11 August 2012 - 01:39 PM.
















