தமிழனும் "நோ இங்கிலீசும் "............
#1
Posted 09 August 2012 - 11:57 AM
இலங்கையின் வடபகுதியின் விவசாயக் கிராமத்தில் இருந்து அண்மையில் கனடா நாட்டுக்கு குடும்ப ஒன்றிணைவின் மூலம் வந்திருந்தார்கள் திரு தமிழனும் திருமதி தமிழனும ... வந்து மூன்று மாதங்கள் தான் இருக்கும் . அவர்களது மகள் வழிப் பேரப்பிள்ளைகளுடன் பொழுது இனிமையாக் கழிந்தது. ஒரு நாள் மகள் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று இருந்தார். இவர்கள் காலாற நடக்க அந்த தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்றலில் உலாவிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அறுபதின் இறுதி வயதுகளில் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திரு தமிழன் முன்னே செல்ல திருமதி பின்னே சென்று கொண்டு இருந்தார். ஒரு (சீயேன்னா )ரக வாகனத்தில் வெள்ளையின ...ரூமேனிய நட்டவராக் இருக்கவேண்டும் ...தொடர் மாடிக் கட்டிடத்தின் வாயிலில் வாகனத்தை நிறுத்தி ... ஓட்டுனர் (ஆண் ) ஒரு வரைபடத்தைக் காட்டி வழி கேட்டார். திரு தமிழன் ..." நோ இங்கிலீஸ் " என்று ... மறுத்து விடார். ...திருமதியிடம் சாரதியின் துணைவி .... இறங்கி எதோ ஒன்றை கையில் திணித்து கொண்டு இருந்தார். அது ஒரு தங்க நிற நாய்சங்கிலிபோன்ர ஒன்று .. திருமதி தமிழன் ...மறுத்து கொண்டு இருந்தார். .....முன்னே சென்ற தமிழன். பின்னேதிரும்பி மனிவியை காணாது மீண்டும் அவரிடம் வந்தார். சாரதி ..மீண்டும் அவரை அணுகி வரைபடத்தைக்காட்டி இவர் மனைவியை பார்க்காத வண்ணம் மறைத்துக் கொண்டார் . சாரதியின் மனிவி ..ஒரு சங்கிலியை திருமதி தமிழன் மேல் அணிவிப்பதுபோல தெரிந்தார்........சில நொடிகளில் ...இவர்கள் வாகனத்தில் ஏறி மறந்துவிடார்கள். திருமதி தமிழன் ..அந்த தங்க நிற சங்கிலியை உற்று பார்த்து கொண்டு இருந்தார். கணவன் வந்து இது எல்லாம் எதற்கு ..என்று அவரை கடிந்துகொண்டார். ...பின் உனது சங்கிலி இருக்கிறதா ..என பார் என்றார். கொலர் உள்ள சட்டை அணிந்து இருந்த திருமதி தமிழன் ....ஏங்கி விட்டார்............நெஞ்சுபட பட படத்தது ..திரு தமிழன்..ஆதரவாக அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று ...விடார்கள் . மூன்றரை பவுண் சிங்கபூர் சங்கிலி அபேஸ்...............மகன் ஆசையாக தாய்க்குவாங்கி வந்தது தன் முதற் சம்பளத்தில் .... . ..இருபது வருடங்களுக்கு முன். ........
மகளும் குழந்தைகளுடன் வீடுவந்து விட்டார் ....... . யாரைக் கேட்பது யாரிடம் முறையிடுவது ..எதுவித ஆபத்தும் இன்றி தாக்குதலும் இன்றி ...தாய் தந்தை தப்பியதே போதும் என பெருமூச்சு விட்டார் மகள்.
வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏனைய மகன்களும் சேதி அறிந்து .... அவதானமாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். .
..ஏனோ இந்த சம்பவத்தை கேட்ட் எனக்கு நம்மவர்கள் கடைகளுக்கு
( walmart ... )வண்டியில் குழந்தைகளை தள்ளிக் கொண்டு ..கொலர் அற்ற சட்டையுடன் பதினாறு பவுண் வெளியே தெரிய அணிந்து வரும் தாலிக் கொடிகளை நினைத்து ...ஆபத்தை விலைக்கு வாங்கும் நம் இளம்பெண்களை நினைத்து ...மனதுக்குள் சஞ்சலப்பட்டது ....
வேற்று இன மக்களுக்கும் தமிழனின் தாலிக் க்கொடி பெறுமதி தங்கத்தின் விலை ..நன்றாகவே தெரிகிறது. பெண்களே ..இடமறிந்து நடந்து கொள்ளுங்கள் . வில்லங்கங்க்களை விலைக்குவாங்காதீர். ஏனையவர்களுக்கு ஒருபாடமாக இருக்கட்டும். உலகை புரிந்து கொள்ளுங்கள். தனியே செல்லும்போது (நகை )கழுத்து கவனம். ..............
.உண்மைச் சம்பவம். சமுதாய விழிப்புணர்வுக்காக ....
- குமாரசாமி, putthan, Thumpalayan and 1 other like this
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.

#2
Posted 09 August 2012 - 12:07 PM
தங்கள் சமுதாய விழிப்புணர்வும்
நேரத்திற்கும்.........
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#3
Posted 09 August 2012 - 01:27 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#4
Posted 09 August 2012 - 10:27 PM
www.theeraanathi.blogspot.com/
#5
Posted 09 August 2012 - 10:35 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#6
Posted 10 August 2012 - 12:45 AM
அந்தஸ்து, கழுத்தில் தான் தொங்குகின்றது, என்று எமது சனம் நினைக்கும் வரைக்கும்,
இப்படியான சம்பவங்களை, நடப்பதைத் தவிர்க்க முடியாது!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#7
Posted 10 August 2012 - 01:01 AM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#8
Posted 10 August 2012 - 01:13 AM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#9
Posted 10 August 2012 - 11:05 AM
உலகில் எதுவுமோ காரணமில்லாமல் ஓசியில்/மலிவில் கிடைக்காது.. கிடைத்தால் வில்லங்கம் வரப்போகிறது என்று அர்த்தம்.. "You get what you pay for!"
#10
Posted 10 August 2012 - 11:25 AM
#11
Posted 10 August 2012 - 05:46 PM
வேற்று இன மக்களுக்கும் தமிழனின் தாலிக் க்கொடி பெறுமதி தங்கத்தின் விலை ..நன்றாகவே தெரிகிறது. பெண்களே ..இடமறிந்து நடந்து கொள்ளுங்கள் . வில்லங்கங்க்களை விலைக்குவாங்காதீர்.
என்னத்தைச்சொல்ல............. எங்கடையள் திருந்துங்கள் எண்டு நினைக்கிறியளே ?? எருமை மாட்டில மழை பெஞ்சமாதிரித்தான் எங்கடை ஆக்களுக்கு அறிவுரையளும் . ஒரு நல்ல புலத்து அனுபவக் கதையை சொல்லியிருக்கிறியள் . மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#12
Posted 10 August 2012 - 06:38 PM
Edited by நிலாமதி, 10 August 2012 - 06:40 PM.
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#13
Posted 10 August 2012 - 06:38 PM
Edited by நிலாமதி, 10 August 2012 - 06:39 PM.
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#14
Posted 10 August 2012 - 06:39 PM
இரண்டு தரம்
அதுவும்கண்ணுக்கு தெரியாதபடி????
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#15
Posted 10 August 2012 - 06:43 PM
எது நடந்தாலும் பரவாயில்லை
நாங்கள் எங்கள் கழுத்து நிறைய தங்கம் இல்லாமல்
வெளியே செல்ல மாட்டோம்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#16
Posted 10 August 2012 - 06:46 PM
பதிவிற்கு நன்றி அக்கா
எது நடந்தாலும் பரவாயில்லை
நாங்கள் எங்கள் கழுத்து நிறைய தங்கம் இல்லாமல்
வெளியே செல்ல மாட்டோம்
கழுத்து நிறைய மட்டும் என்று எழுதி எம்மை இளிவு படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#17
Posted 10 August 2012 - 07:11 PM
கழுத்து நிறைய மட்டும் என்று எழுதி எம்மை இளிவு படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்
![]()
![]()
உள்ளதைத்தானே சொல்லுறார்............. வாறமாதம் பிள்ளையார் கோயில் தேர் வருகிது பாக்கத்தானே போறியள் கூத்துகளை
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#18
Posted 10 August 2012 - 09:30 PM
நல்ல பதிவு நன்றி அக்கோய்
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#19
Posted 11 August 2012 - 07:32 PM
நிழலும் கூட மிதிக்கும்.
#20
Posted 11 August 2012 - 07:40 PM
நாங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கும் "நோ இங்கிலீஷ்" க்கும் என்ன தொடர்பு? இங்கிலீஷ் தெரிந்தாக்கள் போடலாமோ? அல்லவிடட்டால் நோ இங்கிலீஷ் ஆக்கள் மட்டுமோ களவு கொடுக்கினம்?














