Jump to content


Tamil Star News
Photo

ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)


  • Please log in to reply
14 replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,905 posts
  • Gender:Male

Posted 31 July 2012 - 07:50 PM

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தPosted Imageனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு. இன்று அவரின் நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
Posted Imageதொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
Posted Image
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Posted Image
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
Posted Image
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
http://thaaitamil.co...ாடகன்-போர்க்கு/

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert

#2 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 444 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 31 July 2012 - 09:10 PM

மேஜர் சிட்டுவிட்கும் ,அன்றைய (1/8/97) எதிர்ச்சமரில்
வீரச்சாவு எய்திய அனைவருக்கும்

வீரவணக்கங்கள்


#3 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 31 July 2012 - 10:44 PM

அன்பு நண்பா சிட்டு, மரணம் உன்னை அணைத்துக்கொண்டாலும் இன்றும் நீ எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். உன் உடல் எம் மண்ணில் கலந்திருக்கு உன் பாடல்கள் எம் உணர்வோடு கலந்திருக்கு. காலம் நிச்சயம் மாறும் ...

#4 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,311 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 31 July 2012 - 11:06 PM

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#5 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,558 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 31 July 2012 - 11:50 PM

வீர வணக்கங்கள்.

#6 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,637 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 01 August 2012 - 12:02 AM

வீரவணக்கங்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#7 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,218 posts
  • Gender:Male

Posted 01 August 2012 - 02:13 AM

வீர வணக்கங்கள்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#8 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 01 August 2012 - 12:34 PM

வீர வணக்கங்கள்

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#9 நவரத்தினம்

நவரத்தினம்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 641 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது இருப்பிடம்!
  • Interests:பாடுதல், இசையை இரசித்தல்,
    எது வரினும் எதிர் கொள்வது.

Posted 01 August 2012 - 03:20 PM

வீர வணக்கங்கள்.

#10 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 02 August 2012 - 03:37 PM

பன்முக ஆற்றல் கொண்ட மாவீரருக்கு எனது நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#11 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,065 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 02 August 2012 - 05:10 PM

என் அன்புக்குரிய ,பாசத்துக்குரிய மாவீரர்.என்னையும் தமிழீழ இசைவானில் பறப்பதற்கு
ஊக்கமும் ,ஆக்கமும் தந்த இனிய நண்பர் சிட்டுவிற்கு சிரம் தாழ்த்தி வீர வணக்கம் செலுத்துகிறேன் ..........எனது 999 ஆவது பதிவில் இப்படி ஒரு பதிவை அமைக்க வரம் தந்த அந்த அனைத்து மாவீரர் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்............தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...............

Edited by தமிழ்சூரியன், 02 August 2012 - 05:12 PM.

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#12 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,209 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 02 August 2012 - 05:51 PM

சிட்டு, இவரை 90களின் நடுப்பகுதியில் மட்டுவிலில் சந்தித்தேன் .மணலாறில் இருந்து அரசியல் கல்விக்காக வந்த்திருந்தார் .தமிழீழத்தின் அணைத்து பகுதியில் இருந்ததும் ஆண் .பெண் போராளிகள் 600 பேர்வரை ஒன்றுகூடினோம் .சுமார் ஆறு மாதங்கள் அரசியல் பயிற்சி நடந்தது.இப்பயிற்சிக்காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும் .இதில் சிட்டுவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் .பக்த்திப்பாடல்கள் எல்லாம் போராட்டப்பாடல்களாக சிட்டுவினால் மாற்றப்பட்டு பாடப்படும் .பயிற்சி முடிவுக்காலத்தில் இவர் கலைபண்பாட்ட்டுக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் .

சிட்டுவுக்கும் இவருடன் வீரச்சாவடைந்த அணைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள் .

#13 ukkarikalan

ukkarikalan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 216 posts
  • Gender:Male

Posted 02 August 2012 - 08:10 PM

வீரவணக்கங்கள்

#14 கிளியவன்

கிளியவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,750 posts
  • Gender:Male

Posted 04 August 2012 - 06:00 PM

வீர வணக்கங்கள்!

தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை
நட்புடன் கிளியவன்.

 

detailsr.gif

 

 

 


#15 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 04 August 2012 - 06:16 PM

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]