Jump to content


Tamil Star News
Photo

சூடு பிடிக்கும் டெசோ மாநாடு ..?! ஜாதிக ஹெல உறுமயவும் - மு.க.வின் கைது என்ற கோரிக்கையும்..! ஈழதேசம் செய்தி..!.


  • Please log in to reply
1 reply to this topic

#1 meelsiragu

meelsiragu

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 149 posts
  • Gender:Male
  • Location:France

Posted 31 July 2012 - 05:57 PM

சூடு பிடிக்கும் டெசோ மாநாடு ..?! ஜாதிக ஹெல உறுமயவும் - மு.க.வின் கைது என்ற கோரிக்கையும்..! ஈழதேசம் செய்தி..!.

டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து கருணாநிதியை கைது செய்ய வேண்டும்..? என்று ஜாதிக ஹெல உறுமிய கட்சி தெரிவித்துள்ளது. இந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்கே கூறியிருக்கும் செய்தி, நீதிமன்ற அனுமதியைப் பெற்று தமிழகத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டை இந்திய மத்திய அரசு தடை செய்ய வேண்டும், டெசோ மாநாடு நடத்தும் அதன் தலைவர் மு.கருணாநிதியை கைது செய்ய வேண்டும். இந்த மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து யார் சென்றாலும் அவர்கள் இலங்கையின் துரோகிகள் என்றார். மேலும் தமிழ்நாடு ஒரு மாநிலம், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று, எவ்வாறு ஒரு அந்நிய நாட்டின் கொள்கை முடிவுகள் குறித்து ஒரு மாநாடு நடத்துகிறார்கள்..? புரியாத புதிராக உள்ளது என்றார். இலங்கையின் வெளி விவகார துறை இது குறித்து நடவடிக்க எடுக்க வேண்டும். இந்த மாநாட்டினால் இந்திய - இலங்கை உறவுகள் பெரிதும் பாதிக்கப்படும். டெசோ மாநாட்டில் இலங்கையில் இருந்து யார் சென்றாலும் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 157 பிரிவுகளின் கீழ் குற்றமாக கருதி, அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பொருட் கொள்ளாது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


கடந்த காலங்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சி பல்வேறு இந்திய அரசு விரோத கருத்துக்களை கூறிவந்த பொழுதிலும், அதன் அடிநாதமாக தமிழர் விரோத கொள்கையே இருந்து வந்துள்ளன என்ற அறியலாம். நிற்க, ஏன் இவ்வாறு ஒரு கோரிக்கையை வைத்துள்ளது ஜாதிக ஹெல உறுமய கட்சி. இந்த செய்திக்கு வந்த பல பின்னூட்டங்கள் அடிப்படையில் பார்த்தோம் என்றால், இந்திய வெளியுறவுத் துறையும் இலங்கையின் வெளியுறவுத் துறையும்..( இலங்கையில் ஏது வெளியுறவுத் துறை..? அனைத்தும் மகிந்தா குடும்பங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தானே முடிவு செய்கிறார்கள்..என்பது வேறு விசயம்..) ஒரு குட்டி நாடகம் அல்ல பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.


இந்திய அரசும் கையில் ஒன்றுமே இல்லாமல், வெறும் கையுடன் இலங்கை அரசுடன் பொருளாதார பகிர்வுகளை கேட்டுக் கொண்டு நிற்பது என்பது ஏதோ யாசகம் கேட்பது போல உள்ளது என்று நினைக்கிறார்களா..? வெளியுறவுத் துறையின் முடிவுகள் எடுக்கும் அதிகாரிகள். அதற்காக சும்மாவேனும் இந்த டெசோ என்ற சிறு துரும்பை கையில் எடுத்திருக்கலாம். ஆனால் இந்த சிறு துரும்பு இரண்டு பக்கம் உள்ள கூர்மையான கத்தியைப் போல் இருக்கும் என்றே கருதலாம். காங்கிரஸ் அரசு இந்த கத்தியை இலங்கைக்கு எதிராக திருப்பும் பொழுது, மறுபுறம் உள்ள கத்தி முனை தன்னை நோக்கி திருப்பப்படலாம் தி.மு.க.வின் தலைவர் அவர்களால் என்ற ஒரு நிலையும் உள்ளது.


என்றாலும், வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் டெசோ மாநாடு, திருவாளர் மு.கருணாநிதியின் மூன்றாவது அணிக்கான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஒரு மேடை என்றே கருதலாம். இந்திய மற்றும் சர்வதேச அரசியலில் தன்னை விஞ்ச வேறு யாரும் அரசியல் சித்தாந்தம் உள்ள தலைவர்கள் இந்தியாவில் இல்லை என்ற நிலையை மு.கருணாநிதி அவர்கள் உருவாக்கி விட்டார்.

இந்த ஒரு அரசியல் கள உருவாக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தமிழ் தேசியக் கட்சிகள் தவற விட்டு விட்டன என்றால் மிகை அல்ல. டெசோ மாநாடு அறிவிப்பு வந்தவுடன் ப.ழ.நெடுமாறன், வைக்கோ,சீமான் மற்றும் குளத்தூர் மணி, பெ.மணியரசன் மற்றும் ஏனைய தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வரும் அரசியல் கட்சிகள் தானாகவே முன்வந்து டெசோ மாநாட்டில் பங்கேற்கிறோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால், இந்த டெசோ மாநாடே ஊத்தி மூடப்பட்டிருக்கும், அல்லது தள்ளாத வயதில் குடும்ப கட்சி அரசியலில் சிக்கித் திணறும் மு.கருணாநிதிக்கு மிகச்சிறந்த நெருக்கடியை கொடுத்திருக்க முடியும். அல்லது டெசோ மாநாட்டை ஒரு முன்னேற்ற களத்திற்கு தள்ளியிருக்க முடியும்.


இதன் மூலம், இந்த அரசியல் நகர்வுகள் மூலம், தி.மு.க.வின் அரசியல் பலத்தை சுக்கு நூறாக்கி இருக்க முடியும்..? ஒருபுறம் ஜெ.அம்மையாரை குறி வைத்து அரசியல் நடத்தி வரும் மு.கருணாநிதியின் அரசியல் காய் நகர்வுகளை அதன் துவக்கத்திலேயே முடக்கி இருக்க முடியும்..? அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சென்று இருக்க முடியும்..? ஒன்று டெசோ மாநாடு சொல்லாமல் கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும், அல்லது வேறு வழியே இல்லாமல் இலங்கை அரசியலில், மகிந்தாவிற்கு ஒரு பெரும் நெருக்கடியை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தி இருக்க முடியும்..? டெசோ மாநாடு ஒரு பெரும் மோசடி என்று தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் தலைவர்கள் சொல்வதால் எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக, ஒருவேளை டெசோ மாநாட்டை திரு.மு.கருணாநிதி வெற்றிகரமாக நடத்தி விட்டால், அதில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தங்களது பங்களிப்பை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார்களோ என்ற ஐயப்பாடும் உலகத் தமிழர்கள் முன் எழக்கூடும்.


இன்று உள்ள இலங்கையின் முள்வேலி முகாம் மக்களுக்கு ஒரு சிறிதளவேனும் நன்மை ஏற்படுமாயின், அந்த வாய்ப்புகளை தவற விடுவதின் மூலம், தமிழ் தேசிய அரசியல்வாதிகள் என்ன வாய்ப்புகளை புதிதாக ஏற்படுத்தி விட முடியும்..? எனவே தான் இந்த அறிய அரசியல் சூட்சுமத்தை புரிந்து கொண்ட இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியான மு.கருணாநிதி அவர்கள் கையில் எடுத்து உள்ளார். டெசோ மாநாடு என்ற அறிவிப்பின் மூலம் தான் ஒரு பெரும் அரசியல் சூத்திரதாரி என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக கூட இது அவருக்கு உதவலாம். எப்படியெனினும், மு.கருணாநிதியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் அரசை மிரட்டுவதற்கு டெசோ பயன்படலாம். 2G வழக்கில் இருந்து தப்பிக்க பயன்படலாம். ஜெ.அரசியலை எதிர்த்து, தங்களது பலத்தை மீண்டும் உருவாக்க பயன்படலாம். என்றாலும் தேனை எடுப்பதற்கு முயற்சி செய்கிறார் மு.க., அதில் சிறிதளவேனும் பங்கு கிடைக்கும் வாய்ப்பு அல்லவா இருக்கிறது சம்பந்தப்பட்டவர்களுக்கு..? என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


சங்கிலிக்கருப்பு


Advert

#2 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,524 posts
  • Gender:Male

Posted 31 July 2012 - 06:26 PM

இதில் ஒரு அரசியல் அலசலும் இல்லை.
மத்திய அரசும் கருணாநிதியும் சேர்ந்து ஆடும் நாடகம்தான் டெசோ.
இதை காங்கிரசு தனது கைக்குள் அடங்க மறுக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக பாவிக்க முயலும்.
கருணாநிதி காங்கிரசு போட்டுக் கொடுத்திருக்கும் கோடு தாண்டி போனால் கருணாநிதிக்கு 2G போன்றவற்றில் வைத்து அவர் மீது ரசாயனக் குண்டு போட்டு அவரையே முற்றாக அழித்துவிடும். அவர் சொல்லுக் கேட்கும்வரை டெசோவில் காங்கிரசும் அதில் பங்கு.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]