.jpg)
இந்தியாவின் தலைநகர் புதுடில்லி உட்பட வடபகுதியில் இன்று திங்கட்கிழமை பாரியளவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ஆந்திராப் பிரதேசம், ஹிமாலாயப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் சுமார் 300 மில்லியன் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இம்மின்விநியோகம் தடைப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட மின்விநியோக அளவைவிட கூடுதலான மின்விநியோகம் பயன்படுத்தப்பட்டமை இம்மின்விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இம்மின்விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மின்சக்தி அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
http://www.tamilmirr...----300---.html
Edited by தமிழரசு, 31 July 2012 - 09:37 AM.

















