Jump to content


Tamil Star News
Photo

கொண்டைக்கடலை குழம்பு


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,316 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 30 July 2012 - 09:35 AM

Posted Image

வீட்டில் தினமும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் கொண்டைக்கடலையை வைத்து குழம்பு போல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும். அத்தகைய கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்துதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை - 150 கிராம்
கத்தரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2
லவங்கம் - 3
முந்திரி பருப்பு - 2
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
புளி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவிலேயே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து, ஒரு பாத்திரத்தில் கடலையை கழுவி, தண்ணீர் விட்டு சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம், தக்காளியை நன்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

பின்பு மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.

பிறகு அதில் கத்தரிக்காயை போட்டு நன்கு வேகவிட்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை அதில் விட்டு, உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து, வேண்டுமென்றால் உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.

பின் பச்சை வாசனை போனதும், புளியை நன்கு கரைத்து, அந்த நீரை குழம்பில் விட்டு ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி விடவும்.

இப்போது சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி!!!

http://tamil.boldsky...avy-001653.html

மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]