Jump to content


Tamil Star News
Photo

"நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்': மோடி


  • Please log in to reply
1 reply to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 July 2012 - 04:12 AM

"நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்': மோடி ஆவேசம்



குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள், என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


உருது வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:


மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள்.


2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். அதில், வன்முறைகளுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். வன்முறைகளுக்கு எனது அரசு காரணம் எனில், என்னை பொது இடத்தில் தூக்கிலிடலாம் எனக் கூறியிருந்தேன். அதையே இப்போதும் சொல்கிறேன். குஜராத் வன்முறைகளுக்காக நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் குற்றவாளி என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள்.


அதேநேரத்தில், நான் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், எனது கவுரவத்தை சீர்குலைத்ததற்காக, ஊடகங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களுக்காக என்னை குற்றவாளியாக்கினால், அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் குஜராத் மாநிலம் மற்றும் அதன் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறேன். பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்கவில்லை. இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.


எப்.ஐ.ஆர்., தேவை: நரேந்திர மோடியின் பேட்டி தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், குஜராத் வன்முறை சம்பவத்தில், தனக்கு எதிராக விசாரணை நடைபெற வேண்டும் என, முதல்வர் நரேந்திர மோடி விரும்பினால், அவர் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். 12 ஆண்டுகளாக, முதல்வராக இருக்கும் மோடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை எனில், அவரை எப்படி நீங்கள் குற்றவாளி என நிரூபிக்க முடியும். யார் அவரை தூக்கிலிட முடியும், என்றார்.

http://tamil.yahoo.c...-221100035.html

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 July 2012 - 04:20 AM

குஜராத் இந்தியாவின் முன்னணி பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் மாநிலம். இந்த மாநில முதல்வர் பற்றி அமெரிக்கா உட்பட பல நாடுகள் இவர் இந்தியாவின் பிரதமராக வரத்தகுதியானவர் என எழுதினர். அவருக்கும் அந்த ஆசை உள்ளது போலவே தெரிகின்றது.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]