சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்
Started by
akootha
, Jul 28 2012 03:59 AM
3 replies to this topic
#1
Posted 28 July 2012 - 03:59 AM
சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்
சிறைச்சாலைகள் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சிறைச்சாலைகளை நிர்வகிப்பதற்கு மட்டும் தனியொரு அமைச்சு உருவாக்குவது தொடர்பாக முன்னர் யோசனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மத்தியில் நன்னடத்தைகளை பேணுவதற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டும் தற்போது இதனைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக, அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போதைப் பொருள் கடத்தல், பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களாவர். அண்மைக் காலத்தில் கலகங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையில், சட்ட ரீதியற்ற பல்வேறு பாவனைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தால், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு நீக்கப்படும்.
http://onlineuthayan...161269128386209

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 28 July 2012 - 04:06 AM
உலகில் எந்த நாட்டில் சிறைச்சாலை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழே உள்ளது?
இதன் பின்னணியில் கோத்தா, பாதுகாப்பு செயலாளர், இருக்கின்றபடியால் நிமலரூபன் போன்ற படுகொலைகள் சத்தமின்றியே நடாத்தப்பட உள்ளனவா?
இதன் பின்னணியில் கோத்தா, பாதுகாப்பு செயலாளர், இருக்கின்றபடியால் நிமலரூபன் போன்ற படுகொலைகள் சத்தமின்றியே நடாத்தப்பட உள்ளனவா?
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 28 July 2012 - 04:14 AM
நீதித்துறை, அரசியல் துறை, ஊடகத் துறை, என்பவை மூன்றும், தனித்தனியாக இயங்குவது தான், ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு!
இன்னும் சிங்களத்தில் ஜனநாயகம் கொஞ்சமாவது, மிஞ்சியிருக்கின்றது என நம்புபவர்கள், பரிதாபத்துக்குருயவர்களே!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#4
Posted 28 July 2012 - 04:28 AM
நீதித்துறை, அரசியல் துறை, ஊடகத் துறை, என்பவை மூன்றும், தனித்தனியாக இயங்குவது தான், ஜனநாயகத்தின் தனிச் சிறப்பு!
இன்னும் சிங்களத்தில் ஜனநாயகம் கொஞ்சமாவது, மிஞ்சியிருக்கின்றது என நம்புபவர்கள், பரிதாபத்துக்குருயவர்களே!
உலகத்தில் மிஞ்சியுள்ள மன்னராட்சிகொண்ட அரபுநாடுகளில் 'அரபு எழுச்சி' (Arab Spring) மூலம் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி செல்லுகின்றனர்.
இங்கே, சிங்கப்பூரே பார்த்து ஏங்கிய தீவு ... மன்னராட்சியை நோக்கி செல்லுகின்றது !
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]