27 ஜூலை 2012

2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:-
2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூர்வ காரணங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80783/language/ta-IN/article.aspx




















