Jump to content


Tamil Star News
Photo

புலிகளுடன் தொடர்பென வைத்தியர்களை போட்டுக் கொடுத்த பணிப்பாளர் பவானி: சிக்கிய கடிதங்கள்


  • Please log in to reply
No replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,907 posts
  • Gender:Male

Posted 27 July 2012 - 05:49 PM

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவின் ஊழல் மோசடிகள் தொடர்பில் வெளிக்கொணர்ந்த சில வைத்தியர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என போட்டுக் கொடுத்து பணிப்பாளர் எழுதிய இரகசியக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தாய் சங்கத்தினருக்கே இக்கடிதத்தை பணிப்பாளர் பவானி பசுபதிராசா எழுதி இரகசியமாக அனுப்பி வைத்துள்ளார்.

அவர் எழுதிய இக்கடிதமானது,
யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் என். ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்று சில தினங்களில் எழுதப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அபிவிருத்திகள் நடைபெற்றுவருவதாகவும் இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயரில் ஒரு சிலர் குழப்பி, அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சிற்கும் யாழ். வைத்தியர்களை புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என பணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு புலனாய்வாளர்களுக்கும் தவறான தகவல்களை வழங்கி, வைத்தியர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் பணிப்பாளரும் அவருடன் இணைந்த குழுவினரும் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted ImagePosted Image
http://thaaitamil.co...-தொடர்பென-வைத்/

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]