மார்பகப் புற்றுநோய் எதனால்... ஏற்படுகின்றது?
#1
Posted 27 July 2012 - 05:18 PM
எனது உறவினர் ஒருவருக்கு, மார்பகப் புற்று நோய் வந்து.. ஒரு பக்க மார்பகத்தை பத்து வருடடங்களுக்கு முன்பு, சத்திரசிகிச்சை மூலம் அகற்றி விட்டார்கள். அதன் பின் அவர், சுகதேகியாக தனது அன்றாட வேலைகளை... மற்றவர்களை விட சுறுசுறுப்பாக வாழ்ந்தவர். தனது வழமையான பரிசோதனைகளையும், வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு இணங்க செய்து வந்தவருக்கு, அடுத்த மார்பிலும் புற்று நோய் உள்ளதை வைத்தியர்கள் கண்டுபிடித்து... ஆரம்பத்திலேயே அகற்றி விட்டார்கள்.
இது, பரம்பரை வியாதியா?
இப்படியான சம்பவம் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்ததா?
இதனைத் தடுக்க என்ன வழி என்று ஆலோசனை இருந்தால் கூறுங்களேன்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#2
Posted 27 July 2012 - 06:07 PM
- தமிழ் சிறி likes this
#3
Posted 27 July 2012 - 06:12 PM
பரம்பரை வியாதியல்ல அது மட்டுமே தெரியும்.
நன்றி சிற்பி,
இதனையே... வைத்தியர்கள் திரும்பத் , திரும்பக் கேட்கிறார்கள்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#4
Posted 27 July 2012 - 09:08 PM
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.
அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#5
Posted 27 July 2012 - 09:24 PM
கள உறவு ஒருவர் (இளங்கவி?) மார்பக புற்று நோய்
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.
அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்
உங்கள் தகவலுக்கு, நன்றி வாத்தியார்.
ஒருவருக்கு... மார்பகப் புற்று நோய் வந்த பின்பு, தடுக்க முடியாது.
வர, முதல் எப்படி.. தப்பிக்க முடியும்.
இன்னும்.. அதற்கு, வழி இல்லையா...
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#6
Posted 27 July 2012 - 09:40 PM
உங்கள் தகவலுக்கு, நன்றி வாத்தியார்.
ஒருவருக்கு... மார்பகப் புற்று நோய் வந்த பின்பு, தடுக்க முடியாது.
வர, முதல் எப்படி.. தப்பிக்க முடியும்.
இன்னும்.. அதற்கு, வழி இல்லையா...
பெண்கள் ஒவ்வொரு நாளும் கண்ணாடிக்கு முன்னால் நின்று மார்புகளை அழுத்தி பார்க்க வேண்டும் வீக்கம் எதுவும் இருந்தால் கட்டாயம் வைத்தியரிடம் போக வேண்டும்...பிராவை தொடர்ச்சியாக அணிந்திருந்தாலும் மார்பு புற்று நோய் வரும் என சொல்கிறார்கள் சரியாக தெரியவில்லை இது பற்றி தெரிந்த யாழ்கவி போன்றோர் தங்கள் கருத்துக்களை எழுதலாம்...இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஸ்மிய டெஸ்ட்[smear test] என்னும் புற்றுநோய்க்கான பரிசோதனை பெண்களுக்கு கட்டாயம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்
#7
Posted 27 July 2012 - 09:53 PM

அவர், மருத்துவ விடயங்களில் விழிப்புணர்வு உள்ளவர் ரதி.
பத்து வருடங்களாக... மருத்துவரின் ஆலோசனைப்படியே... நடந்து வந்துள்ளார்கள்.
அதுக்குப் பிறகும்.... இப்படி, வந்தது என்றால்... மருத்துவம் இன்னும் முன்னேறவில்லை என்று அர்த்தமா?
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#8
Posted 27 July 2012 - 10:01 PM
அவர், மருத்துவ விடயங்களில் விழிப்புணர்வு உள்ளவர் ரதி.
பத்து வருடங்களாக... மருத்துவரின் ஆலோசனைப்படியே... நடந்து வந்துள்ளார்கள்.
அதுக்குப் பிறகும்.... இப்படி, வந்தது என்றால்... மருத்துவம் இன்னும் முன்னேறவில்லை என்று அர்த்தமா?
எனக்கு தெரியவில்லை யாழில் உள்ள வைத்தியர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
#9
Posted 27 July 2012 - 10:23 PM
எனக்கு தெரியவில்லை யாழில் உள்ள வைத்தியர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
யாழில் உள்ள வைத்தியர்கள், புத்தகத்தில் படித்தாலூம்....
அதன் வலியை... உணர்ந்தவர்கள் சொன்னால் நல்லது.
நாம்... இந்த உலகில் பிறக்கும் போது, எமக்கு பால் கொடுத்து...
எம் உயிரை, வாழ வைப்பதே... அந்த முலை தான்.
அதற்குப் பெயர் தாய். அதற்காக... உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#10
Posted 27 July 2012 - 10:32 PM
கள உறவு ஒருவர் (இளங்கவி?) மார்பக புற்று நோய்
சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறியதாக ஒரு ஞாபகம்.
அவர் இதை வாசித்தால் நிச்சயம் பதில் கூறுவார்
யாழ்கவியையும் இளங்கவியையும் போட்டுக் குழப்பிய வாத்தியாரை என்ன பண்ணலாம்?
#11
Posted 27 July 2012 - 10:38 PM
யாழ்கவியையும் இளங்கவியையும் போட்டுக் குழப்பிய வாத்தியாரை என்ன பண்ணலாம்?
![]()
உந்தக் குழப்பம் வரும் எண்டு தான்....
கவிதை வாசிக்கவே.... போறதில்லை.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#12
Posted 27 July 2012 - 11:14 PM
கூட விடயம் தெரிந்தவர்கள் எனக்கு அப்படி வராது இப்படி வராது என்ற எண்ணத்தில் கவலையீனமாக இருந்து விடுகிறார்கள்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்
#13
Posted 27 July 2012 - 11:38 PM
தமிழ்சிறி இந்த நோய் வரக் காரணம் பிள்ளைகளும் கணவனுமே.
கூட விடயம் தெரிந்தவர்கள் எனக்கு அப்படி வராது இப்படி வராது என்ற எண்ணத்தில் கவலையீனமாக இருந்து விடுகிறார்கள்.
ஈழப்ப்ரியன்,
அப்படி, அடித்துக் கூறுகின்றீர்கள்,காரணத்தையும் சொன்னால் மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#14
Posted 27 July 2012 - 11:43 PM
ஈழப்ப்ரியன்,
அப்படி, அடித்துக் கூறுகின்றீர்கள்,காரணத்தையும் சொன்னால் மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.
எனக்கென்னவோ அதிலை ஒரு வில்லங்கம் தெரியுது..
#15
Posted 27 July 2012 - 11:58 PM
Cervical Screening / Smear test கருப்பை புற்று நோய் தொடர்பான பரிசோதனை என நினைக்கிறேன்.
#16
Posted 28 July 2012 - 12:44 AM
பெண்களுக்கு வரும் இது போன்ற பல வியாதிகளுக்கு மூல காரணமாக இருக்கக் கூடியது 'கருத்தடை மாத்திரைகள்' என சொல்கின்றார்.
இந்த கருத்தடை மாத்திரைகள் உடலின் இயற்கையான சுரப்பிகளின் செயல் பாடுகளை தடுத்து, பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கருக்கட்டல் எனும் ஏதோ ஒன்றினை தடுக்கப் பயன்படும் இது, அது தொடர்பான சுரப்பிகளின் இயற்கையான செயல் பாட்டினை தடுக்க, அது வேறு எங்கோ பக்க விளைவினைக் காட்ட இது போன்ற பிரச்சினைகள் வரும்.
சிலரது உடல் வாசிக்கு இது ஒன்றும் செய்யாது, வேறு சிலருக்கோ குளறுபடி தான். இவர்களுக்கு பின்னர் குழந்தை வேண்டும் எனும் போது, கருக்கட்ட முடியாத அவல நிலைமையும் உண்டாகும். வேறு சிலருக்கு இது போன்ற வியாதிகள் வரலாம்.
பழைய காலத்திலும் கருவினை தடுக்க, அழிக்க, மூலிகை வைத்தியம் பார்த்து இருக்கின்றனர். எனவே இவ் வியாதிகள் முன்னரும் இருந்திருக்கின்றன.
இதனை மக்களுக்கு விபரிக்க முனைந்தால், வேறு சமூக பிரச்சனைகள் உருவாகும் (Eg: teen age pregnancy). எனவே அரசு இதனை கண்டு கொள்ளாது.
இது தான் முக்கிய காரணம் என சொல்ல வரவில்லை ஆனால், கருத்தடை மாத்திரைகள் தவிர்க்கப் பட வேண்டும்
- குமாரசாமி, இசைக்கலைஞன், தமிழ் சிறி and 1 other like this
#17
Posted 28 July 2012 - 01:02 AM
நாதமுனி கூறிய மாதிரி... கருத்தடை மாத்திரை பாவித்திருப்பார்களோ என்று தெரியாது.
எனது வாழ்வில்....ஒரேயொரு முறை தான்... 30 கருத்தடை மாத்திரை வாங்கினேன்.
மிச்சம் எல்லாம்... கடவுள் தந்தது
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#18
Posted 28 July 2012 - 01:11 AM
Edited by குமாரசாமி, 28 July 2012 - 03:38 PM.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#19
Posted 28 July 2012 - 01:27 AM
#20
Posted 28 July 2012 - 01:38 AM
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்காக நன்றிகள்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.