Jump to content


Tamil Star News
Photo

தமிழ்க் கைதிகளை சந்திக்க மன்னார் ஆயருக்கு மறுப்பு


  • Please log in to reply
1 reply to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 27 July 2012 - 05:13 PM

வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் கைதிகளை இன்று சந்திக்கச் சென்ற மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனுமதி மறுத்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி மற்றும் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் இன்று பகல் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா சிறைச்சாலையிலிருந்து இடமாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றனர்.

இதன்போது மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு குறித்த கைதிகளைப் பார்க்க அனுமதி வழங்க முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததைத் தொடர்ந்து டாக்டர் ஜயலத் ஜயவர்தன மாத்திரம் குறித்த கைதிகளை சென்று சந்தித்தார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி தெரிவிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்க் கைதிகளை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியி;ன் பிரதி;ப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் நிலைமை மற்றும் துக்கங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.
___


http://www.virakesar...asp?key_c=39684


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,228 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 05:25 PM

இதனை, மன்னார் ஆயர் வத்திக்கானில் உள்ள போப்பாண்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.
மகிந்தவை சந்திக்க நேரம் ஒதுக்கும் போப்பாண்டவர், தமிழ் கிறிஸ்தவ மக்களின் குரலையும்... அழிவையும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உலகறியச் செய்து... நீதி பெற்றுத்தர வேண்டும்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]