
http://www.desicomme...9692/696921.gif
இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்...
நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்!
நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்
என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்!
நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும்
எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்...
அனைத்துக்கும் விடை கிடைக்கும்!
உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை,
நிறையவே இருக்கின்றது... அதுவரையும்,
என்னுயிர் பிரியாது!
உண்மையான நேர்மையான பதில்கள்
உன்னிடமிருந்து வரும்வரைக்கும்...
என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...!
ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும்
ஒரு பெண்ணால் முடிகிறது!
ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும்
அதே பெண்ணால் முடிகிறதே!!
இதில் நீயும் நானும் யார்?
ஒருதலைப்பட்சமான உன் முடிவுகளோடு
இந்த முடிவினையும் நீயே தீர்மானித்துக்கொள்!
இந்தச் சின்ன உலகம் சுற்றும்போது, (***)
கடிகார முட்கள்கூட
அடிக்கடி சந்தித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
நியதிகள் அப்படியிருக்க...
நீ மறந்துபோன நானும் ...நீயும்???
*** கவிதையின் இறுதிப்பகுதி இணைக்க மறந்ததினால் மாற்றப்பட்டது . தவறுக்கு மனம் வருந்துகின்றேன் .
கவிதை அனுப்பிய கவிதை 01 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் .
http://www.yarl.com/forum3/index.php?showtopic=105253
கவிதை அனுப்பிய கவிதை 02 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் .
http://www.yarl.com/forum3/index.php?showtopic=105423
Edited by கோமகன், 04 August 2012 - 08:27 PM.















