Jump to content


Tamil Star News
Photo

முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும்: மு.கா பிரதித் தலைவர்


  • Please log in to reply
5 replies to this topic

#1 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 27 July 2012 - 03:01 PM

முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும்: மு.கா பிரதித் தலைவர்


முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார்.


இலங்கைவாழ் சிறுபான்மைச் சமூகங்கள் என்ற வகையில் சிறந்த இணக்கப்பாடான நல்லுறவைப் பேணுவதற்கும், பெரும்பான்மைச் சமூக ஆட்சியாளர்களின் அகங்கார அடக்குமுறை முறைகளிலிருந்து விடுபடுவதற்கும், ஸ்ரீலங்காவில் சிறப்பான எதிர்காலமொன்றை நமக்கென நிலைநிறுத்தவும் இது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்தமை வருமாறு:-


மிக நீண்ட காலமாக இருந்து வரும் குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான், தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்களில் பலரும், தமது வெற்றிக்குப் பின்னர் பெரும்பான்மையினர் கட்சிகளுக்குத் தாவினர் அமைச்சுப் பதவிகளை ஏற்று, தமிழர் சமூகத்தை ஏமாற்றினர் என்பதாகும்.


இன்றும் இது பற்றி ஊடகங்களில் கருத்துக்களை முன்வைக்கின்ற தமிழ் புத்திஜீவிகள் ஒருபுறம். மக்கள் சந்திப்புகளிலும், கூட்டங்களிலும், ஊடக நேர்காணல்களிலும் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இன்னொருபுறம்.


இவ்விதமாக குற்றச்சாட்டுகளை அடுக்கும் அவர்கள் அத்தகைய கட்சித் தாவல்களெல்லாம் தனிநபர்களின் பொறுப்புக் கூறலே என்பதை மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள்.


இவர்களில் எவரையும் முஸ்லிம் சமூகம் தள்ளிக்கொண்டுபோய் அமைச்சர்கள் ஆக்கவில்லை. அவர்கள் தேவைக்கும் விருப்புக்கும் ஏற்றவகையில் அவை நடந்தேறின. தொடர்ச்சியாக தமிழர்கள் முஸ்லிம்களை வேட்பாளராக நிறுத்தியும், அவர்கள் வெற்றிபெறவே செய்தனர். முஸ்லிம்கள் தமிழர் அரசியலை விட்டும் நீங்க விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளவேண்டும். இதேவேளை, அதே அமைச்சர்களை முஸ்லிம் சமூகம் தோற்கடிக்கவும் செய்தது.


இத்தகைய அரசியல் போக்கு என்பது முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் உண்டு. பெரும்பான்மை தரப்பாரிடம் சேவகம் பண்ணிவரும் தமிழ் அரசியல்வாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை கணிசமாக உண்டு. இவையெல்லாம் தனிநபர்களின் செயற்பாடே தவிர, சமூகத்தின் பிரதிபலிப்புக்கள் அல்ல.


தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களுக்கு உண்டு. முஸ்லிம்களில் ஏதோ ஓரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த சமூகமும் அந்நாட்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது. வடக்கே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது உள்ளடங்களாக பல்வேறு காயங்கள் வரலாற்றில் அழிக்கமுடியாத வடுக்களாக இருக்கின்றன.


தமிழர் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வரும் மற்றுமொரு விடயம்தான், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுடன் முஸ்லிம்களும் உடன்பாடு கொள்ள வேண்டுமென்பது.


இதுவும் ஒரு தவறான புரிந்துணர்வாகும். உலக வரைபடத்தில் இந்தியா என்றொரு தேசம் உள்ளவரை தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற விடயமாகும். தனது மாநில ஆட்சிக்கு பங்கம் வருவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. இத்தகைய சாத்தியப்பாடற்ற விடயங்களுடன் முஸ்லிம்கள் உடன்படுவது பொருத்தப்பாடாகாது. அதேவேளை அசாதாரண நிலைமைகளை உருவாக்கி, மக்களை அனாவசியமான பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும் அரசியல் போக்குகளை ஸ்ரீலமுகா முன்னெடுக்க விரும்பவில்லை என்பதையும் தமிழர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


http://www.tamilmirr...7-09-11-55.html


Edited by akootha, 27 July 2012 - 03:02 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,553 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 27 July 2012 - 06:08 PM

முஸ்லீம்கள் தங்களுக்கு, சிங்களவனால்... பிரச்சினை ஏற்படும் போது,
தமிழ் பாசம், பொத்துக்கொண்டு வரும்.
இது, எல்லாம்.... ஆடு நனையுதெண்டு, ஓள்நாய் கண்ணீர் வடிச்ச கதை தான்...
முஸ்லீமை ஒரு தமிழ்ச்சனமும்... கிட்ட அடுக்கப்படாது.
அவர்களின் கடைகளில், சாமான் வாங்கினால்....
அரோகரா....
திவசம் செய்ய, வேண்டியது தான்.....
  • ஆராவமுதன் likes this

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 27 July 2012 - 07:16 PM

கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரசுடன் முடிந்தளவுக்கு இணைந்து, முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள குறைப்பாடுகளை தீர்க்கும் முயற்சியிலும் அவர்கள் நம்பிக்கையை இந்தச்சந்தர்ப்பத்தில் மேலும் வளர்க்கும் விதமாகவும் செயல்படல்வேண்டும்.
  • நிழலி likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 July 2012 - 03:28 AM

உலக வரைபடத்தில் இந்தியா என்றொரு தேசம் உள்ளவரை தமிழ் ஈழம் என்பது சாத்தியமற்ற விடயமாகும். தனது மாநில ஆட்சிக்கு பங்கம் வருவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது. இத்தகைய சாத்தியப்பாடற்ற விடயங்களுடன் முஸ்லிம்கள் உடன்படுவது பொருத்தப்பாடாகாது.



'முடியாது என்று ஒன்றும் இல்லை. முயற்சிப்பவன் மட்டுமே வாழ்க்கையை வெற்றி கொள்ளுகின்றான்".

Edited by akootha, 28 July 2012 - 03:47 AM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 03:31 AM

கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரசுடன் முடிந்தளவுக்கு இணைந்து, முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள குறைப்பாடுகளை தீர்க்கும் முயற்சியிலும் அவர்கள் நம்பிக்கையை இந்தச்சந்தர்ப்பத்தில் மேலும் வளர்க்கும் விதமாகவும் செயல்படல்வேண்டும்.


தமிழனின் முதலாவது பலவீனம் இது தான்! ஒருநாளும் உருப்படப் போவதில்லை!!!

முதலில் தமிழனின் குறைகளை தீர்க்க வக்கில்லை, இஸ்லாமிய வெறியர்களின் குறைய தீர்க்க ஆசைப்படுவது!

முன்னர் பின்னர் அறியாத ஒருவன் இஸ்லாமியர்களின் அடவாடித்தன உண்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்காமல், தமிழர் மீது குறைகளைச் சொல்லிக் கொண்டே அறிக்கை விடுகிறான்! ஏன் இந்த அறிக்கையை அதன் அதன் தலைமை வெளியிடவில்லை? நாமும் விழுந்தடித்து இணக்க அரசியல் பற்றி பேசுகிறோம்! இது தமிழரின் பலத்தை ஒருபோதும் கூட்டாது! அர்த்தமுள்ள தமிழ் - முஸ்லிம் இணைப்பை ஒருபோதும் உருவாக்காது! தமிழ் - முஸ்லிம் இணைப்பை நாம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை! ஆனால் அவன் மீண்டும் மீண்டும் தமிழனை ஏமாற்ற இடம் கொடுக்க வேண்டாம்! அயோக்கியத்தனம் செய்தவன் அதை உணர்ந்து மனிப்புக்கேட்டு இணையட்டும்! உங்கள் இணக்க அரசியல் கருத்துக்கள் மூலம் அந்த சூழ்நிலைகளை இல்லாமல் செய்துவிடாதீர்கள்!

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 


#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 July 2012 - 03:42 AM

தமிழனின் முதலாவது பலவீனம் இது தான்! ஒருநாளும் உருப்படப் போவதில்லை!!!


இன்று தமிழர்களும் முஸ்லீம்களும் பலவீனமான அரசியல் நிலையில் உள்ளார்கள். எனவே எந்தத்தரப்பும் உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இல்லையேல் .... சிங்களவனுக்கே கொண்டாட்டம்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]