தேவையான பொருட்கள் :
புளி-ஒரு எலுமிச்சையளவு
காய்ந்தமிளகா-நான்கு
தனியா-இரண்டு தேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்டி
வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
வெங்காயம்- ஒன்று
முழு பூண்டு-ஒன்று
தக்காளி-ஒன்று
கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
செய்முறை :
புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,
பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்டு கலந்து வைக்கவும்
வெங்காயம் பூண்டை தோல் உரித்து வைக்கவும்
கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளூத்தம்பருப்பு வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும்
வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சத்தூள் போட்டு வதக்கவும்
பின்பு புளிக் கரைசலை ஊற்றி மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் பொடியைப் போட்டு கொதிக்க விடவும்
குழம்பு கொதித்து எண்ணெய் மேலே மிதந்ததும் கறிவேப்பிலையை போட்டு இறக்கி விடவும்.
குறிப்பு :
எத்தனை நபர்கள் : 6
சமைக்க எடுத்துகொள்ளும் நேரம் : 00 hrs 30 mins
வழங்கியர் : Mrs.manohari
http://www.manoharim...emid=13&lang=en















