எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது.
அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம்.
துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக like பண்ணுங்கள்.
இதனால் பிரயோசனம் இருக்கிறதா இல்லையா தெரியாது.
வீடியோவின் கீழ் கருத்துகளையும் வையுங்கள்.
youtube account இல்லாதவர்கள் புதிதாக open பண்ணுங்கள். மக்களுக்கு, channel 4 இற்கு உதவி செய்ததாகவும் ஆகும். அதே நேரம் விருப்ப தெரிவுகளில் நீங்கள் பாடல்களையும் சேமித்து வைக்கலாம். வேறு பிரயோசனங்களும் கிடைக்கும்.
சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம். (Sri Lanka's Killing Fields)
தற்போதைய நிலை
like - 1344
dislike - 1326
சேனல் 4 - இலங்கையின் கொலைக்களம் 2- தண்டிக்கப்படாத போர் குற்றங்கள். (Sri Lanka's Killing Fields 2 - Unpunished War Crimes)
தற்போதைய நிலை
like - 1448
dislike - 4376
ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவரும் channel 4 இன் இந்த இணைப்பில் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். எம்மக்களின் அவலங்களை மேலும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கேளுங்கள்.
http://www.channel4....ies-1/episode-1
பி.கு:- இதனை கலைஞன் அண்ணா வேறொரு திரியில் முன்பு சுட்டிக்காட்டி இருந்தார். இது விடயத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக அவருக்கு அப்பொழுது வாக்குறுதி கொடுத்திருந்தேன். எனவே இப்பொழுது இத்திரியை ஆரம்பித்தேன்.
Edited by துளசி, 25 July 2012 - 02:09 PM.
















