Jump to content


Tamil Star News
Photo

வவுனியாவில் குவிந்துள்ள படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நிமலரூபனின் உடலுக்கு மக்கள் அஞ்சலி!


  • Please log in to reply
21 replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,078 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 02:33 PM

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்இ கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றனஇந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர்.

நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறையினர் படையினர் மற்றும் படை புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் அங்சலி செலுத்த முடியாத சூழலில் இறுதி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிட தக்கது.

நிமலரூபனின் இறுதி நிகழ்வின் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சத்திலும் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ன அச்சம் காரணமாகவே பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
Posted ImagePosted ImagePosted ImagePosted Image
http://thaaitamil.co...ல்-குவிந்துள்ள/

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert

#2 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,558 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 02:44 PM

இறந்தவரின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் கூட... சப்பாத்துடன் நிற்கும் சிங்கள இராணுவம்.
அவரின் உறவுகளை ஆவது, இறந்த நிமலரூபனுக்கு அஞ்சலி செலுத்த விடுங்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 02:48 PM

நிமலரூபனை பிரிந்து தவிக்கும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 496 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 24 July 2012 - 04:01 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்.

#5 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,524 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 05:18 PM

அந்த ஓட்டை கொட்டிலிலுக்குள் கூட இந்த மிருகங்கள் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள்.

யாழ்ப்பாண சந்தையை களைகட்டவைத்தவர்களுக்கு இப்படியும் ஒரு தமிழ் வீடு இருபது தெரிந்திருக்கவில்லையா?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by மல்லையூரான், 24 July 2012 - 05:19 PM.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 


#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 07:05 PM

அரசியல் கைதிகள் இறந்தால் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்: மனோ

அரசியல் கைதிகள் நாளை இறப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக வவுனியாவில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மனோ கணேசன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சகோதரர் நிமலரூபன் இயற்கையாக மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டு அடித்து கொல்லப்பட்டுள்ளார். இது மாத்திரமல்ல மேலும் ஒரு அரசியல் கைதியான தில்ருக்சன் என்பவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றோ நாளையோ மரணித்தாலும் கூட ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில் அந்தளவு மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இன்னும் பலர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படாமல் மருத்துவ உதவிகள் வழங்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் சாகவிடப்பட்டுள்ளார்கள்.

ஆகவே தான் சில தமிழ் கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளோம். அதாவது, இலங்கையில் இடம்பெற்ற போர் தான் இந்த படுகொலைக்கும் காரணமாக இருக்கின்து. எனவே எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டாலும் கூட அதற்காக தலையிடாவிட்டாலும் கூட இணைத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்காவும், கனடாவும், ஜப்பானும், நோர்வேயும் சாகக் கிடக்கும் எமது அரசியல் கைதிகளையாவது மீட்டுத் தரவேண்டும்.

ஒட்டமொத்தமான முறையில் இதற்கான கோரிக்கையை விடுக்கின்றோம். இந்;த அரசியல் கைதிகள் நாளை இறப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இங்கு இடம்பெற்ற போருக்கு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகள் அனைத்தும் வெளிப்படையாக தமது பங்களிப்பை செலுத்தியதை நாம் கண்டுகொண்ட உண்மை. இதன் தொடர்ச்சியாக தான் இந்த கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirr...4-15-51-27.html

Posted Image

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#7 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,524 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 07:29 PM

அசோக்மேத்தா இந்த காடைகளுக்குள் தேர்ந்தெடுக்கபட்ட காட்டுமிராண்டிகளிடம் தான் போய் கூட்டமைப்பை அரசியல் தீர்வு பெறச் சொன்னவர்.

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 


#8 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 24 July 2012 - 07:48 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இது மாத்திரமல்ல மேலும் ஒரு அரசியல் கைதியான தில்ருக்சன் என்பவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றோ நாளையோ மரணித்தாலும் கூட ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில் அந்தளவு மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இன்னும் பலர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படாமல் மருத்துவ உதவிகள் வழங்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் சாகவிடப்பட்டுள்ளார்கள்.

:( :(

#9 Nellaiyan

Nellaiyan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,371 posts
  • Gender:Male
  • Location:London

Posted 24 July 2012 - 08:16 PM

Posted Image
நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே

Nellaiyaan@yahoo.com

#10 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 09:16 PM

நிமலரூபனின் கொலைக்கு நீதி கிடைக்காது.

புலம்பெயர் மக்கள் அந்த அநீதிக்கு, அந்த ஆட்சியை நடாத்தும் கொலைகாரர்களுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. அதுவே எங்களால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#11 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,126 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 09:28 PM

Posted Image


29 வருடங்களுக்கு முன்னர் என் வீட்டிலும் இதே நிலைதான்

சிங்களக் காடையர்களின் அட்டூழியங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

புத்தரின் வாரிசுகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

நிமலரூபனின் திருவுடலுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#12 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 24 July 2012 - 09:29 PM

புலம்பெயர் மக்கள் அந்த அநீதிக்கு, அந்த ஆட்சியை நடாத்தும் கொலைகாரர்களுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. அதுவே எங்களால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை.


இது சாத்தியமா? எம்மக்கள் தான் இதை கேட்டு நடக்க மாட்டார்களே....

இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.
நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க தான் அவர்கள் துணை போகிறார்கள்.

#13 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 09:33 PM

இது சாத்தியமா? எம்மக்கள் தான் இதை கேட்டு நடக்க மாட்டார்களே....

இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.
நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க தான் அவர்கள் துணை போகிறார்கள்.



பொதுவாக 'இது அடுத்தவனின் பிரச்சனை. எனக்கோ என் குடும்பத்திற்கோ வராது' என எண்ணி ஏமாறுபவர்கள் எம்மவர்களில் உண்டு.
  • துளசி likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#14 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,817 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 24 July 2012 - 10:29 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#15 Sembagan

Sembagan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 461 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 11:21 PM

புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.
நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க
து கை செய்யும்.
நிமலரூபனை பிரிந்து தவிக்கும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

#16 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,427 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 11:51 PM

கண்ணீர் அஞ்சலிகள்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#17 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,896 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 25 July 2012 - 12:20 AM

அவர் ஆன்மா சாந்தியடையட்டும்..! :(
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#18 Volcano

Volcano

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,048 posts
  • Gender:Male
  • Location:Canada

Posted 25 July 2012 - 12:32 AM

சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யபட்ட உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..அவருடைய ஆத்மா சத்தியடைய வேண்டுகிறோம்.
இந்த நிகழ்வு ஒரு தனியான நிகழ்வு என கருதாமல், அவரை போன்ற மற்றைய கைதிகளையும் விடுவிப்பதர்ற்கும், அவர்களை இயல்பு வாழ்வில் இணைவதர்ற்குரிய சந்தர்பங்களை ஏற்படுத்துவதர்ற்கும் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.
இந்த நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உரிய முறையில் உதவிகள் கிடைக்க பல கைகளும் இணைய வேண்டும்.
  • akootha likes this

#19 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 25 July 2012 - 12:45 AM

Posted Image


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#20 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 25 July 2012 - 12:55 AM

Posted Image


வவுனியாச் சிறைச்சாலைச் சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட திரு. கணேசன் நிமலரூபன் அவர்கள் ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.


மீண்டும் 1983 இல், யூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவுகளும், இனவெறித்தாக்குதல் காட்சிகளும் கண்முன்னே வந்துபோனது.


ஏதோ ஒரு வகையில் சிறையிலாவது தமது மகன் உயிருடன் உள்ளார் என்ற சிறிய நம்பிக்கையில் இருந்த பெற்றோருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கிறது.


நிமலரூபனின் பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர் மற்றும் சமூக நண்பர்களின் கரங்களை இறுகப் பற்றி எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே வேளை அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கிறோம்.


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”


பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
ஐக்கிய இராட்சியம்


Posted Image

Edited by akootha, 25 July 2012 - 12:53 AM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]