
உடற்பயிற்சி செய்த, ராஜபக்சே மனைவி முன்பு நந்தி போல நின்றவர் கைது!
கொழும்பு: ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு முன்பு ஒரு வாலிபர் திடீரென வந்து நின்று கொண்டு நகராமல் அடம் பிடித்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
காலே பேஸ் கிரீன் என்ற இடத்தில் ஷிராந்தி வழக்கமான காலை உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக போலீஸாரும் நின்றிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பகுதிக்கு வந்தார். ஷிராந்தி நடை பயிற்சிக்குப் போனபோது அவரது பாதையில் நின்று கொண்டு நகராமல் நின்றார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை விலகிச் செல்லுமாறு இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியபோது அதை அந்த நபர் கேட்கவில்லை. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.
குற்றம் இழைக்கும் நோக்கத்தில் அவர் வந்திருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் மன நலம் குன்றியவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நன்றி தற்ஸ்தமிழ்.
Edited by தமிழ் சிறி, 24 July 2012 - 01:01 PM.

















