Jump to content


Orumanam
Photo

பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் பிரிக்கலாம், இலங்கையிலிருந்து தமிழ்ஈழத்தைப் பிரிக்க கூடாதா? - சீமான் கேள்வி


  • Please log in to reply
1 reply to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 22,722 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 24 July 2012 - 08:27 AM

Posted Image
கருணாநிதி அரசியல் சுயலாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார் என்று சீமான் கூறினார்.நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மொத்தம் 8 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் இதில் 10 ஆயிரம் பேர் கூட தமிழர்களாக வாழவில்லை. நாம் மதங்களாக, ஜாதிகளாக பிரிந்து கிடப்பதால் பலவீனப்பட்டுக் கிடக்கிறோம். மற்ற மாநிலங்களில் அவரவர் இனத்தை அவரவர் ஆள்கின்றனர். ஆனால் இங்கு மட்டும்தான் நம்மை மற்றவர்கள் ஆள்கின்றனர். உலகில் தமிழன் வாழாத நாடில்லை. ஆனால் நமக்கு என்று ஒரு நாடு இல்லை.
நம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரைச் சூட்டுவோம். நமது பிள்ளைகளைத் தமிழ் பிள்ளைகளாக உருவாக்குவோம். தமிழை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைப் பிரிக்கலாம். ஆனால் இலங்கையிலிருந்து தமிழ் ஈழத்தைப் பிரிக்க கூடாதா?
மத்தியில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்துவிட்டு கூட்டாட்சி மலரச் செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில கட்சிகளே ஆளவேண்டும். திமுக தலைவர் கருணாநிதி அரசியல் சுயலாபத்துக்காக டெசோ மாநாடு நடத்துகிறார். ஊழலை உண்ணாவிரதம் இருந்து ஒழிக்க முடியாது. உளமாற உணர்ந்துதான் ஒழிக்க முடியும் என்றார் அவர்.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 வாத்தியார்

வாத்தியார்

    உதைபந்தாட்ட வீரன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,732 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 08:37 AM

இந்தியாவின் ஒற்றுமை இன்னும் எத்தனை காலம் ?
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]