Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 24 July 2012 - 08:26 AM
தமிழகம், மண்டபம் அருகே மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கைப் படகில் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் எனச் சந்தேகித்து, தமிழக உளவுப் பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் சண்டை முடிவடைந்த நிலையில், இலங்கையில் தேயிலை, புகையிலை, பீடி உள்ளிட்ட பொருள்களை அதிக விலை கொடுத்து இலங்கை மக்கள் வாங்க வேண்டிய நிலையுள்ளது. இதனால், இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள கடத்தல்காரர்கள் இணைந்து இராமேசுவரம், மண்டபம், வாலிநோக்கம், தேவிபட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து, இலங்கைக்கு புகையிலை, பீடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கடத்திச் செல்கின்றனர். இந்த கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தமிழக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கியூ பிரிவு பொலிஸார், இந்திய கடலோரக் காவல் படை, சுங்கத் துறை, மத்திய உளவுப் பிரிவு பொலிஸார் கண்டறிய முடியாத வகையில், கடத்தல்காரர்கள் தப்பித்து விடுகின்றனர். இந்த நிலையில், திங்கட்கிழமை அதிகாலை மண்டபம் வேதாளை அருகே குறவன் தோப்புக் கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்த வெள்ளை நிற பைபர் கிளாஸ் படகு மர்மமான முறையில் கரை ஒதுங்கியது. மேலும், படகில் சிங்கள மொழியில் பெயர் எழுதி இருந்ததால், இப் படகு இலங்கை தலைமன்னார் தெற்குப் பகுதியில் உள்ள நீர்கொழும்பு கடற்கரையில் இருந்து கடத்தல்காரர்கள் கடத்தி வந்திருக்கலாமா அல்லது படகில் போராளிகள் தப்பித்து தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாமா என்பது குறித்து கடலோரப் பாதுகாப்பு மற்றும் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மண்டபம் கடலோரப் பாதுகாப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊடுருவியவர்களைப் பிடிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
இலங்கையில் இருந்து படகில் வந்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கரை ஒதுங்கி தலைமறைவான மூன்று பேர், விடுதலைப் புலிகளா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மண்டபம் வேதாளை ஊராட்சி குறவன்தோப்பு கடற்கரையில், நேற்று முன்தினம் அதிகாலை, இலங்கை பிளாஸ்டிக் படகு கேட்பாரற்று நின்றது. அப்பகுதி மக்களின் தகவலையடுத்து, கியூ பிரிவு போலீசார் படகை சோதனையிட்டனர். இதில், அது, இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரியவந்தது. படகில் இன்ஜின் இல்லாததால், அதை கடற்கரை மணலில் புதைத்து வைத்துள்ளனரா என போலீசார், அந்த பகுதி முழுவதும் சோதனையிட்டனர். ஆனால், இன்ஜின் கிடைக்கவில்லை.கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "படகு காற்றில் திசைமாறி வந்ததாக தெரியவில்லை. படகில் வந்தவர்கள் சாவகாசமாக நங்கூரமிட்டு, படகை நிறுத்தி உள்ளனர். இதில் இருந்து கழற்றிய இன்ஜினை எங்கோ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இப்பகுதியில் விசாரணை செய்ததில் சரியான தகவல் தெரியவில்லை. ஆனால், இலங்கையர் படகில் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். படகில் மூன்று நபர்கள் வந்து இறங்கிச் சென்றதாக, கடலோரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். வந்தது இலங்கையர்களா? அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பதிலும் தெளிவு ஏற்படவில்லை. மேலும், இலங்கை படகில் வந்ததன் மூலம், இலங்கையர் என நம்ப வைப்பதற்காகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. வந்தவர்கள் சர்வசாதாரணமாக படகை நிறுத்திவிட்டுச் சென்றது, கடலோர பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தொய்வு எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். http://www.seithy.co...&language=tamil
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]