இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரை ஏற்றிய இரு படகுகள் நேற்று (23) அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குச் சென்ற படகில் 123 பேரும் கோகொஸ் தீவுக்குச் சென்ற படகில் 36 இலங்கையர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் கள்ளப்படகில் சென்று புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் 1278 பேர் நுழைந்துள்ளனர்.
அகதிகளை நாட்டின் அகதி முகாம்களுக்கு அழைத்துச் செல்ல 10 நாட்களில் மாத்திரம் அவுஸ்திரேலிய அரசாங்கம் $500,000 பணத்தை செலவிட்டுள்ளது.
மேலும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5100 அகதிகள் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]