Jump to content


Tamil Star News
Photo

ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் 600 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன


  • Please log in to reply
1 reply to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,186 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 24 July 2012 - 05:14 AM

ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் 600 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன



ஐரோப்பிய யூனியனில் ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனமை காரணமாக 600 க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டமையினால் பல்லாயிரக் கணக்கானோர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இவ்வாறான தொரு நிலையில் அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் கை கொடுத்துள்ளமை வரவேற்கக் கூடிய விடயமென்று ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் தயா அப்பரல் நிறுவனத்தின் உரிமையாளருமான தயா கமகே தெரிவித்தார்.

ஙதிருக்கோவிலில் திங்கட்கிழமை ஆடைத் தொழிற்சாலை யொன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுடர் பற்றீஷியா புட்னிஷ் பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் பாரியளவில் பங்களிப்பை செலுத்தும் என எதிர்பார்க்கிறோம், நாட்டின் முக்கிய வளமான மனித வளத்தை இவ்விரு மாகாணங்களிலும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வில்லை. இந் நிலையில் நாட்டில் ஆடைத் தொழிற் துறையில் பணி புரிகின்ற 85 வீதமான பெண்களின் பங்களிப்புக் காரணமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது.

தயா... ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்த எனக்கு ஆரம்ப கால கட்டத்தில் தற்போதைய முகாமைத்துவப்பணிப்பாளராகிய அனோமா கமகேயின் அயராத முயற்சியின் காரணமாக இலாப மீட்டக் கூடிய ஓரு நிறுவனமாக அதை மாற்ற முடிந்தது.

இதுவரை எமது நிறுவனத்தில் 3000 இற்கும் அதிகமான ஊழியர்கள் சேவை செய்வதுடன் அம்பாறை, நீகவாப்பி, நாமல்ஓயா, வீரகொட, செவனகல, திருக்கோவில், மகா ஓயா, நிந்தவூர் ஆகிய இடங்களில் ஓன்பது ஆடைத் தொழிற் சாலைகளை நிறுவியுள்ளேன்.
சகல இன மக்களுக்குமாக அதாவது தமிழ் மக்களுக்காக திருக்கோவிலிலும், முஸ்லிம் மக்களுக்காக நிந்தவூரிலும் சிங்கள மக்களுக்காக மகா ஓயாவிலும் தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளேன்.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலையில் அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடிந்தமையையிட்டுப் பெருமையடைகிறேன் என்றார்.

இங்கு அமெரிக்கத் தூதுவர் உட்பட பலரும உரையாற்றினர்.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=16895:---600---&catid=291:business&Itemid=462

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 10:31 AM


பொதுவாக உலக அரசியலில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்று செய்வதை இன்னொன்று பின்பற்றும்.


இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் மீறப்பட்டமையால் தான் ஐரோப்பிய ஒன்றியம் ஒருசில நாடுகளுக்கே தந்த இந்த வரிச்சலுகையை நீக்கியது. இதையே அமெரிக்காவும் செய்தால் இலங்கையின் நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]