Jump to content


Orumanam
Photo

சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி


  • Please log in to reply
No replies to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 30,564 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 24 July 2012 - 04:57 AM

சிரிய தலைநகரில் மோதல்கள் உக்கிரம் இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு இதுவரை சிரியாவில் 19,000 பொதுமக்கள் பலி
டமாஸ்கஸ்: சிரியாவின் இரு பாரிய நகரங்களான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் இடம்பெறும் மோதல் சம்பவங்களினால் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சிதரும் நிலையில் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை தேடிச் செல்கின்றனர்.


ஹெலிகொப்டர்கள் கனரக போர் வாகனங்கள் மூலம் அரச படையினர் போராளிகளின் இலக்குகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரிடையேயும் மிகமோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பிலும் கணிசமானளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதால் உயிரிழப்புகள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆரம்பத்தில் அரச படையினர் வசமிருந்த பகுதிகளைப் போராளிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.


தற்பொழுது அப்பகுதிகளை மீட்பதற்கு அரச படைகள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஹெலிகொப்டர் மூலம் அரச படையினர் சிரியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சிதருவதாகக் கூறப்பட்டுள்ளது. யுத்த டாங்கிகள் சகிதம் தரையில் அரச படையினர் போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
டமாஸ்கஸ் மற்றும் வரலாற்று புகழ்மிக்க நகரமான அலெப்பே ஆகிய நகரங்களின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
அப்பகுதிகளை மீட்கவே அரச படைகள் மிகவும் உக்கிரமான தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


இதேவேளை மத்திய ஆசிய நாடான சிரியாவில் நடைபெற்று வரும் கிளர்ச்சியால் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கு எதிராகப் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசு எதிர்ப்புப் படையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.


இப்போது மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தலைநகர் டமாஸ்கஸை முற்றுகையிட்டு அரசு எதிர்ப்புப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் பல ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் கிளர்ச்சியில் மொத்தம் 19,106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 13,292 பேர் அப்பாவி பொதுமக்கள், 4,861 பேர் அரசுக்கு ஆதரவாகப் போரிட்ட இராணுவத்தினர்.


அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பதே தெரியவில்லை.


தலைநகர் டமாஸ்கஸ் மட்டுமன்றி முக்கிய நகரங்களிலும் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இந்த வன்முறையால் ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 86 பேர் பொதுமக்கள். வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் அரசு எதிர்ப்புப் படையினர் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசுகின்றனர். இதனால் வீடுகளில் பதுங்கியிருக்கும் பெண்கள், குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.
போதிய உணவு, மருந்து இன்றி பலர் அவதிப்படுகின்றனர். சிலர் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி ஓடுகின்றனர். நாடு முழுவதுமே வன்முறையும் கண்மூடித்தனமான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. எனவே அடுத்த சில நாட்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=16875:--------19000--&catid=290:world&Itemid=461


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

ninaivu-illam

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]