Jump to content


Orumanam
Photo

ஒவ்வொரு முறையும் வந்து என்னதான் கேட்கிறார்கள்?


 • Please log in to reply
4 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 01:26 AM

ஒவ்வொரு முறையும் வந்து என்னதான் கேட்கிறார்கள்?
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-07-23 10:51:55| யாழ்ப்பாணம்]


இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததோ இல்லையோ வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கொழும்புக்கும் யாழ்ப்பாண த்திற்கும் அடிக்கடி வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து செல்கின்றனர். அவ்வாறு கேட்டறிபவர்கள் கேட்டதை என்னதான் செய்கிறார்கள் என்பது தெரிய வில்லை.


வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற எம்மவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் புளுகில் அவர்களைச் சந்தித்துக் கொள் கின்றனர். இச்சந்திப்புப் புளுகு அடுத்த பிரதிநிதியின் வருகை வரைக்கும் நீடிக்கும். வடபகுதிக்கு வருகின்ற - சந்திக்கின்ற பிரதி நிதிகளிடம் தொடர்ந்து கருத்துக் கூறாமல், முன்பு வந்து எங்களிடம் கேட்டுச் சென்ற விபரம் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்பதற்கு இங்கு ஆட்களே இல்லை என்றாகிவிட்டது.


யாழ்ப்பாணத்தில்; அரசியல் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர் ஆகியோரை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சந்திக்கும் போது என்ன விடயம் கூறப்படுகின்றது என்பது தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றதா என்று கேட்டால் அதுதான் இல்லை.

மறைமுகமாக அரசுக்கு ஆதரவான கருத் துக்களைத் தெரிவிப்பதுடன் ஒருசில விடயங் களை தமிழ் மக்களுக்காகக் கூறிவிட்டு அதனை ஊதிப் பெருக்கி தமிழ் ஊடகங்களுக் குக் கொடுத்துவிட்டு அங்கும் நல்ல பிள்ளை. இங்கும் நல்லபிள்ளை என்ற பக்கா நடிப்பே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.


வடபகுதிக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதி நிதிகள் வடபகுதியின் உண்மை நிலையை அறிய வேண்டுமாக இருந்தால் இந்து சமயத் தலைமைகளையும் சந்திக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியான சந்திப்புக் கள் நடக்கவே இல்லை. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்து மதத் தலைமைகளையும் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தியதாக வரலாறு இல்லை. தந்தை செல்வநாயகம் கிறிஸ்தவ மதத் தைச் சார்ந்தவர். எனவே அந்த சமயம் சார்ந்த ஒருவரை தமிழரசுக் கட்சிக்குத் தலை மையாகக் கொண்டு வருவதற்கு இரா. சம்பந் தன் முயற்சிக்கும் போது வெளிநாட்டுப் பிரதிநிதி களை இந்து சமயத் தலைமைகள் சந்திப்பதை அவரும் அவர் சார்ந்தவர்களும் விரும்பமாட் டார்கள் என்பது தெரிந்த விடயமே.

இந்த நாட்டின் தேசியக் கொடியான சிங்கக் கொடியையும் காளியம்மனின் வாகனமான சிங்கத்தையும் தொடர்புபடுத்தும் மகாமேதை கள் இருக்கும் வரை தமிழ் மக்கள் இருப் பதையும் இழப்பார்களேயன்றி வேறு எதுவும் நடக்காது என்பது நிறுத்திட்டமான உண்மை. எதுவாயினும் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தவே வெளிநாட்டுப் பிரதிநிதி கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக இருந்தால் அவர்களின் வருகை அதிகமாகிவிட்டது என்றே கூறவேண்டும்.


http://www.valampuri...ws.php?ID=29543


Edited by akootha, 24 July 2012 - 01:27 AM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 Sooravali

Sooravali

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,454 posts
 • Location:அகண்ட வெளி

Posted 24 July 2012 - 06:31 AM

ஊருக்குப் போத்திரும்பிய ஒவ்வொருத்தரும் ஊரைப்பற்றி சொல்லும்போது அந்தமாதிரி கிடக்காம்.

ஊருக்கே போய் இருக்கப் போவதாயும் சொல்ல்கிறார்கள்.

வெளிநாட்டும் பிரதிநிதிகளிடம் அங்கு என்ன சொல்லப்படுகுதோ?


வெளிநாட்டில் இருந்து போபவர்கள் அங்குபோய் தாமிருந்த காலத்துடன் தற்கால வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் கருத்துக்களை பார்க்கும்போது பாவம் மாவீரர்கள் என்றுமட்டுமே எண்ணத் தோன்றுகின்றது.

குறுகிய மனமும் மிகக் குறுகிய நினைவு திறனும் கொண்டதே எமது சமுதாயம்.

விடுதலையும் தீர்வும் வெறும் பொழுதுபோக்கு கோசமே..
திரும்பிப்போய் தொடக்கத்தை யாராலும் மாற்ற முடியாது,
தொடந்து சென்றால் முடிவையாவது மாற்றமுடியும்.

வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

#3 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,068 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 08:49 AM

ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள
பல்வேறு முறையில் படம் காட்டுகின்றனர்.

தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது மிகவும் சுலபம் என்பது
அவர்களுக்கு எப்போதோ விளங்கிவிட்டது.
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 10:26 AM

வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவது என்பது வராமல் விடுவதை விடமேல். ஆனால் எமது பிரதிநிதிகள் தான் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,084 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 24 July 2012 - 07:42 PM

வெளிநாட்டு பிரதிநிதிகள் வன்னிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு தான் செல்கிறார்கள்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]