Jump to content


Orumanam
Photo

ஐ.நாவுக்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் ஒப்படைக்க அவுஸ்.முயற்சி


 • Please log in to reply
6 replies to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 01:23 AM

தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள்

(சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஐ.நா. விசாரணை இன்னும் முடிபுறாத பட்சத்தில் விசாரணை முடிபுறும்வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக்குழு, அவுஸ்திரேலியா அரசினை கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்திரேலியா இவரை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்து இலங்கைக்கு அனுப்ப முடிபு செய்துள்ளது.


குறித்த நபர்இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மன நிலை குன்றிய நிலையில் முகாமில் இருந்து விடுதலையாகிய பின்னர், இலங்கையில் தனது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் சென்றார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு வினருக்கு அவுஸ்திரேலியாவில் அடைபட் டுக் கிடந்த அன்பு தனது சாட்சியினை வழங் கியிருந்தார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் திகதி மீண்டும் இவருக்கான பிடியாணை யை இலங்கை அரசு வழங்கியுள்ளமையும் தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளவர்கள் பட்டியலில் இணைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேலை செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்கெனவே கடுமையான சித்திர வதைகளை அனுபவித்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தற் போது இலங்கை அரசிற்கும் அரச படை களுக்கும் எதிராக அவர்களின் குற்றச் செயல் கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் உறவினர்கள் உள்ளனர்.


இவரின் நாடுகடத்தலுக்கு எதிராக தமிழ் அமைப்புகள்,மனிதநேய செயற்பாட்டா ளர்கள் ஆவன செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வைக்க முடியாது என அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் பொவன் அண்மையில் தெரிவித் திருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


http://www.valampuri...ws.php?ID=29541


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 01:40 AM

இவரின் நாடுகடத்தலுக்கு எதிராக தமிழ் அமைப்புகள்,மனிதநேய செயற்பாட்டா ளர்கள் ஆவன செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

http://www.valampuri...ws.php?ID=29541


விபரங்களை வெளிவிட முடியாதா?


"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#3 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,684 posts

Posted 24 July 2012 - 03:29 AM

Should Australia Investigate the treatment of returned Tamil asylum Seekers? Please participate in the poll‏

Below the article there is a poll that we encourage everyone to participate and pass on to others.
Question
Should Australia Investigate the treatment of returned Tamil asylum Seekers?
http://www.watoday.c...22kur.html#poll
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 03:36 AM

இன்னும் ஐந்து மணித்தியாலத்தில் மூடப்படவிருக்கும் கணிப்பில் "ஆம்" (திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் பற்றி அவுஸ் விசாரணை செய்யவேண்டும்) என வாக்களித்தேன்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,914 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 03:40 AM

ஆம் என வாக்களித்துள்ளேன்.
ஆம் என்பதற்கு 52% வாக்குகளும், இல்லை என்பற்கு 48% வாக்குகளும் உள்ளது.
யாழ் உறவுகள் அனைவரும் இந்த வாக்களிப்பில் கலந்து கொண்டு, ஆம் என வாக்களியுங்கள்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#6 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 10:49 AM

நன்றி கந்தப்பு. இன்றுதான் பார்த்தேன். 53:47
"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.

#7 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,110 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 24 July 2012 - 07:17 PM

நான் திண்ணையில் போட்டிருந்ததை கவனித்த போது poll closed என்று வந்தது. (கொஞ்சம் முன்னம் பார்த்திருக்கலாம்.) ஆனாலும் சாதகமான விகிதம் தானே. :)

Edited by துளசி, 24 July 2012 - 07:19 PM.யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]