Jump to content


Tamil Star News
Photo

கட்டுநாயக்கவில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்


  • Please log in to reply
11 replies to this topic

#1 மின்னல்

மின்னல்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,761 posts
  • Gender:Male
  • Location:முகில்களுக்குள்

Posted 24 July 2012 - 01:05 AM

கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

24.07.2001 அன்று அதிகாலை கட்டுநாயக்க வான்படைத் தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு தாக்குதல் அணி வான்படைத்தளத்திலும் அதனோடு இணைந்திருந்த பன்னாட்டு வானூர்தித் தளத்திலும் பல வானூர்திகளை அழித்து பலவற்றைச் சேதப்படுத்தியும் சிறிலங்கா அரசிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது.

கட்டுநாயக்க வான்படைத்தளத்தில் வைத்து தமிழின அழிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கிபிர் மற்றும் மிக் - 27 குண்டு வீச்சு வானூர்திகள் உட்பட 8 வான்படை வான்கலங்கள் அழிக்கப்பட்டன் 12ற்கும் மேற்பட்ட வான்படை வான்கலங்கள் தேசமாக்கப்பட்டன.

வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழிவுகளை ஏற்படுத்திய கரும்புலிகளால், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தித் தளத்திற்கு ஊடுருவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார் பஸ் ரக வானூர்திகள் இரண்டு அழிக்கப்பட்டு மூன்று சேதப்படுத்தப்பட்டன.

சிறிலங்கா அரசிற்கும், அதன் படைகளிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 14 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது முகம் மறைத்து, முகவரி மறைத்து விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Posted Image
  • akootha and பகலவன் like this
Posted ImagePosted Image
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 01:15 AM

எதிரிகளிடம் இருந்து எமது மக்களை பாதுகாக்க எதிரிகளின் விமானங்களை அழித்த இந்த வீரம் செறிந்த தாக்குதலில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 03:05 AM

உங்கள் வரிகளை வரலாற்றில் நிரந்தரமாக்கி விட்டவர்களுக்கு, வீரவணக்கங்கள்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,262 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 03:11 AM

கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#5 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,250 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 24 July 2012 - 04:55 AM

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#6 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,934 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 08:32 AM

வீர வணக்கங்கள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#7 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,307 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 24 July 2012 - 03:44 PM

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#8 கிளியவன்

கிளியவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,750 posts
  • Gender:Male

Posted 25 July 2012 - 03:16 AM

Posted Image

தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை
நட்புடன் கிளியவன்.

 

detailsr.gif

 

 

 


#9 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 25 July 2012 - 10:48 AM

இந்த மறைமுக கரும்புலிகளுக்கு என் வீர வணக்கங்கள். இந்நாளில் தாக்குதலை திறம்பட நெறிபடுத்திய கேணல் சாள்ஸ் அண்ணாவுக்கும் வீர வணக்கங்கள்.

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#10 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,532 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 25 July 2012 - 03:55 PM

அனைத்து கரும்புலிகளுக்கும் வீர வணக்கங்கள்.

#11 தமிழினி

தமிழினி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 904 posts
  • Gender:Female

Posted 25 July 2012 - 03:58 PM

வீர வணக்கங்கள்......!
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

#12 யாழ்கவி

யாழ்கவி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,287 posts
  • Gender:Female
  • Location:தமிழீழம்

Posted 26 July 2012 - 11:46 AM

வீர வணக்கங்கள்!
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]