Jump to content


Tamil Star News
Photo

தனுஸ்கோடி அருகே நடுக்கடலில் சிறிலங்காவின் புதிய கடற்படைத்தளம்


  • Please log in to reply
2 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,292 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 23 July 2012 - 10:58 PM

Posted Image
இந்திய – சிறிலங்கா கடல் எல்லையில், தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கு அருகே 7வது மணல் திட்டில் சிறிலங்கா கடற்படை புதிய முகாம் ஒன்றை நிறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் தனுஸ்கோடிக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியில் 13 மணல்திட்டு உள்ளன.
பகல் முழுவதும் கடல்நீர் வற்றி மணல்திட்டுகளாக இருக்கும் இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்து காணப்படும்.
இந்தியாவின் கடல்எல்லை பகுதி 6-வது மணல்திட்டுடன் முடிவடைகிறது. 7வது மணல்திட்டு தொடக்கம் சிறிலங்காவுக்குச் சொந்தமானது.
இந்தநிலையில் தனுஸ்கோடிக்கு அருகே உள்ள சிறிலங்கா கடல் எல்லை ஆரம்பிக்கும் 7-வது மணல் திட்டிலேயே சிறிலங்கா கடற்படையினர் புதிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.
இங்கு 24 மணி நேரமும் சிறிலங்கா கடற்படையினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ள இந்த புதிய முகாம் குறித்து தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
http://eelampresse.com/?p=3429
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,593 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 23 July 2012 - 11:04 PM

சீனா வரமுன்னம் இலங்கை கடற்படையே இந்தியாவை ஒரு வழி பண்ணும்போலை இருக்கே??!! :D
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#3 மல்லையூரான்

மல்லையூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,997 posts
  • Gender:Male

Posted 24 July 2012 - 01:28 AM

தனிய போகமட்டார்கள். கிந்திகாரன் முதுகில் குத்துவான் என்று சந்தேகப்படுவார்கள். இப்போதைக்கு ஒட்டு பார்ப்பதுடன் நிறுத்திவிடுவார்கள். சீனாகாறன் தான் ரெடி என்று பச்சைக்கோடி காட்டுகிற அன்று ஒரேபாச்சலாகத்தான் காந்தி அம்மா மீது பாய்வார்கள்.

எதற்கும் மலையாளத்தானுக்கு காசுகொடுத்துவிட்டுத்தானே கட்டியிருப்பார்கள். அவர்களுக்கும் தளம் வருவது நேரத்திற்கே தெரிந்திருக்கும். தமிழ்நாட்டு மீனவர்கள் அப்பாவிகள்.

Edited by மல்லையூரான், 24 July 2012 - 01:34 AM.

  • விவசாயி விக் likes this

சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை இடம்பெறவிடாமல் இரண்டாம் தடவையும் இரண்டாவது ஐ.நா. பிரேரணையையும் தோற்கடித்த இந்தியா இனித்தன்னும் உணர்ந்து கார்த்திகைப் பொதுநலவாய மகாநாடு இலங்கையில் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும்.

 


 

 





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]