Jump to content


Orumanam
Photo

தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குச் சவால் விடும் வகையில் செயற்படும் சிறிலங்கா.


  • Please log in to reply
No replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 22,506 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 23 July 2012 - 10:53 PM

Posted Image
சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும், மேலும் பல சிறிலங்கா படை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னையில் வந்திறங்கிய நான்கு சிறிலங்கா படை அதிகாரிகள் பின்னர், கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் கொல்கத்தாவில் ஏ.என்-32 விமான இயந்திரம் பொருத்தும் பயிற்சியைப் பெறவுள்ளனர். கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இவர்களுக்கு நான்கு மாதகாலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. நவம்பர் 23 ஆம் நாள் வரை இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
புரொபுல் சியொன் (வயது 33), ஜெகத் சந்திரகுமார (வயது 25), சரத் சமீர (வயது 33), பின்ன கொடகே நிலந்த (வயது 28) ஆகிய சிறிலங்கா படை அதிகாரிகளே பயிற்சிக்காக கொல்கத்தா வந்துள்ளனர். சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமான தளம் மற்றும் வெலிங்டன் இராணுவப் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து இந்த இரு இடங்களிலும் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா படை அதிகாரிகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குச் சவால் விடும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நான்கு படை அதிகாரிகளை சென்னை விமான நிலையம் ஊடாக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
http://www.seithy.co...&language=tamil
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam





யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]