உயர்மட்ட இலங்கை இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யஉள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம்செய்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டபிரதிநிதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 ஆம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததனைத் தொடர்ந்து, இலங்கை உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இல்கையின் தற்போதைய சூழ்நிலை ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கம் உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.seithy.co...&language=tamil















